விஜயவாடா: ஆந்திர மாநில அமைச்சரான ரோஜா, செய்துள்ள ஒரு காரியம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
நடிகையாக இருந்து அரசியலில் புகுந்து எம்.எல்.ஏவாகி இன்று அமைச்சராகவும் இருப்பவர் ரோஜா. அவரது அதிரடி அரசியலால் ஆந்திர மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் தெறித்து ஓடும் அளவுக்கு கெத்து காட்டி வருகிறார் ரோஜா.
Cut to Vijayawada!

விஜயவாடாவைச் சேர்ந்தவர் நாகராஜு. போலியோவால் மாற்றுத் திறனாளியான இவர் சாலையோரத்தில் சிறிய வீட்டில் வசித்து வருகிறார். மிக மிக வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் நாகராஜு. இவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
நேற்று பாம்பே காலனி பகுதியில் உள்ள நாகராஜு வீட்டுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா ஒருவர் வந்தார். கை நிறையப் பரிசுப் பொருட்களுடன் வந்த அவரைப் பார்த்து நாகராஜு குடும்பத்தினருக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கிறிஸ்துமஸ் தாத்தா அத்தோடு நிற்கவில்லை. கையோடு கொண்டு வந்திருந்த கேக்கையும் எடுத்து வைத்து "வாங்க வெட்டலாம்" என்று அழைக்கவே அவர்களும் இணைந்து கொண்டனர். கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்தார் தாத்தா.

அதன் பிறகு உடல் நலமில்லாமல் இருக்கும் நாகராஜுவின் மனைவியிடம் ஒரு காசோலையைக் கொடுத்தார். சாதாரணமா தொகை அல்ல.. ரூ. 2 லட்சம் பணம் அது.. அதைப் பார்த்து நாகராஜுவும், அவரது மனைவியும் இன்னும் குழப்பமடைந்தனர்.. இதற்கு மேலும் சஸ்பென்ஸ் வைத்தால் நாகராஜு குடும்பம் ரொம்பவே குழம்பி விடும் என்று நினைத்த தாத்தா தனது முகமூடியைக் கழற்றினார்.. பார்த்தால்.. அது நம்ம ரோஜா!
நாகராஜு குடும்பத்தினர் அப்படியே இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போய் விட்டனர். அவர்களால் நம்பவே முடியலை. அமைச்சர் ரோஜாவா நம்ம வீட்டில் அமர்ந்திருக்கிறார் என்று ரொம்பவே ஹேப்பியாகி விட்டனர்.

இதுகுறித்து ரோஜா கூறுகையில் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாளையொட்டி நாகராஜு வீட்டுக்குப் போய் அந்த குடும்பத்தை மகிழ்விக்க நினைத்தேன். அதன்படி சென்றேன். மிகவும் கடினமான உழைப்பாளி நாகராஜு. தனது குடும்பத்துக்காக எதையும் செய்யத் துணிபவர். உடல் ஊனம் ஒரு முட்டுக்கட்டையே இல்லை என்பதை அவரைப் பார்த்தாலே புரியும். அவருக்கும், அவரது மனைவி, இரு மகள்களுக்கும் நான் என்னாலான உதவிகளைச் செய்துள்ளேன். இது சாதாரண உதவிதான் என்று அடக்கமாக கூறியுள்ளார் ரோஜா.

முன்னதாக ஒய்எஸ்ஆர் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் டூவீலர் பேரணியிலும் ரோஜா கலந்து கொண்டார். கட்சிப் பாடல் ஒலிக்க, அதை ஜாலியாக பாடியபடி ரோஜா டூவீலரை ஓட்டிச் சென்றது அனைவரையும் கவர்ந்தது.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!
மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்
பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்
நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!
கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!
மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்
ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}