100 நாள் வேலை நிலுவைத் தொகை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

Jan 27, 2025,07:03 PM IST

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.1056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டுமென ஏற்கனவே முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மனு அளித்தார்.


கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. திட்டத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்ற நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நிதியாண்டிலும் இத்திட்டத்தின் கீழ் நூறு நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு தினசரி சம்பளமாக ரூபாய் 294 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. 




ஆனால் 2024 -25 ஆம் ஆண்டில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தினசரி சம்பளமாக ரூபாய் 294 இல் இருந்து,ரூபாய் 312 ஆக ஊதியம் உயர்வு அளித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர் 29 சதவீதம் குடும்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களாக ஊதிய நிதி பற்றாக்குறையால் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தின் நிலுவைத் தொகையான ரூ.1,056 கோடியை விடுவிக்க வேண்டும் என  பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். 


இதை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி கனிமொழி, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்