சென்னை: தமிழ்நாட்டில் டிசம்பர் 30ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வட கிழக்குப் பருவ மழை பெரிய அளவில் பெய்து தீர்த்து விட்டது. இனி பெரிய மழைக்கான வாய்ப்பி இருக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டு பெரும் வெள்ளப் பெருக்கு தமிழ்நாட்டின் வட கோடி மற்றும் தென் கோடி மாவட்டங்கள் சந்தித்து விட்டன.
இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், டிசம்பர் 28 வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}