அழகான ஆகஸ்ட் மாதம்.. என்னென்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா!

Aug 10, 2026,05:30 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


க்ரிகோரியன் நாட்காட்டியின்   படி ஆண்டின் எட்டாவது மாதமாக விளங்கும் ஆகஸ்ட் மாதம் பல்வேறு விசேஷ நாட்களும், திருவிழாக்களும் நிறைந்த ஒரு சிறப்பான மாதமாகும். மொத்தம் 31 நாட்கள் கொண்ட இந்த மாதம் ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் சீசரின் நினைவாக இம்மாதத்திற்கு "ஆகஸ்ட்" என்று பெயர் வந்தது. 


அதற்கு முன்பு இம்மாதத்தை " செக்சுடி லிசு  "- (sextilis) என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நம் இந்திய நாட்டின் சுதந்திர தினம் இம்மாதத்தில் கொண்டாடப்படுவது ஆகஸ்ட் மாதத்திற்கு  பெருமை சேர்க்கிறது.


வரலாற்றுச் சிறப்பு :


பழைய ரோமன் காலண்டரில் ஆகஸ்ட் மாதம் ஆண்டில் ஆறாவது மாதமாக இருந்தது. 304 நாட்களைக் கொண்டிருந்த ரோமன் காலண்டரில் சில ஆண்டுகளில் 30 நாட்களைக் கொண்ட மாதமாகவும், சில ஆண்டுகளில் 29 நாட்களை கொண்ட மாதமாகவும்  ஆகஸ்ட் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.பல்வேறு நாடுகளில் ஆகஸ்ட் மாதம் அறுவடை மாதமாக விளங்குகிறது. 1900-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் கொக்கோகோலா விற்பனையை தொடங்கியது. முதல்முறையாக இந்நிறுவனம் இங்கிலாந்தில் விற்பனையை தொடங்கியது என்று கூறப்படுகிறது.




இந்தியா, ஜமைக்கா நாடுகளின் சுதந்திர தின விழாக்களும் ஆகஸ்ட் மாதத்தில்  வருகின்றது. ஸ்வீடன் நாட்டில் குழந்தைகளுக்கு  பலரும் "ஆகஸ்ட்" என்று பெயர் சூட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப்போர் ஆகஸ்ட் மாதத்தில் தான் முடிவுக்கு வந்தது.


ஆகஸ்ட் மாத விசேஷ மற்றும் விரத நாட்கள்: 


ஆகஸ்ட் 11 :செவ்வாய் மாத சிவராத்திரி.

ஆகஸ்ட் 12- புதன்கிழமை ஆடி அமாவாசை. உலக இளைஞர்கள் தினம்.

ஆகஸ்ட் 14 -வெள்ளி ஆடிப்பூரம்.

ஆகஸ்ட்15  -சனிக்கிழமை இந்திய சுதந்திர தினம்.

ஆகஸ்ட் 16 -ஞாயிறு சதுர்த்தி விரதம்.

ஆகஸ்ட் 18- செவ்வாய் சஷ்டி விரதம் (வளர்பிறை).

ஆகஸ்ட் 19- புதன் அஷ்டமி (வளர்பிறை).

ஆகஸ்ட் 20- வியாழன் நவமி திதி.

ஆகஸ்ட் 21- வரலட்சுமி விரதம்.

ஆகஸ்ட் 23- ஞாயிறு ஏகாதசி விரதம்.

ஆகஸ்ட் 25 -செவ்வாய் பிரதோஷம்.

ஆகஸ்ட் 26- புதன் ஓணம் பண்டிகை.

ஆகஸ்ட் 27 -வியாழன்  ஆவணி அவிட்டம், பௌர்ணமி திதி.

ஆகஸ்ட் 29 -சனிக்கிழமை  தேசிய விளையாட்டு தினம்.

ஆகஸ்ட் 30 - ஞாயிறு சுபமுகூர்த்த தினம்.

ஆகஸ்ட் 31 - திங்கள் மகா சங்கடஹர சதுர்த்தி.

ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அமைந்துள்ள விசேஷமான நாட்களை இப்பதிவில் அறிந்து கொண்டுள்ளோம். அனைவரும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்