நடு ராத்திரியில்.. "நான்தான்டா உன் மாமியார்".. அரிவாளுடன்.. ஆண்டிமடத்தை அதிர வைத்த சரோஜா!

Jan 26, 2024,06:12 PM IST

ஆண்டிமடம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே 53 வயதான சரோஜா என்ற பெண் செய்த செயல் அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது. தனது மகளைக் கொன்ற மருமகனை, காத்திருந்து  பழி தீர்க்க அவர் செயல்தான் அனைவரையும் அதிர வைத்து விட்டது.


அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்கலம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் சரோஜா. இவருக்கு வயது 53. இவருடைய கணவர் பழனிவேல். இவர்களுடைய மகள் பிரியா. பிரியாவிற்கும் அதே பகுதியைச்சேர்ந்த பால் வியாபாரி தமிழரசனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.


கல்யாணம் ஆனதிலிருந்தே கணவன் மனைவிக்கு இடையே ஒத்துவரவில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைதான். தமிழரசனிடம் சிக்கி படாதபாடு பட்டுள்ளார் பிரியா. இந்த நிலையில் ஒரு நாள் வழக்கம் போல மூண்ட சண்டை விபரீதத்தில் முடிந்து விட்டது. பிரியாவை, தமிழரசன் அடித்தே கொன்று விட்டார். போலீஸார் தமிழரசனைக்  கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதத்திலேயே ஜாமீனில் வெளியே வந்து விட்டார் தமிழரசன்.




இதனால் ஆவேசமடைந்தார் சரோஜா. எனது மகளையும் கொன்று விட்டு இப்போது ஜாமீனில் வந்து விட்டானே என்று மருமகன் மீது தீராக் கோபமடைந்தார். மகள் இல்லாமல் நீ மட்டும் எப்படி வாழ முடியும் என்று வெகுண்ட அவர் மருமகனை போட்டுத் தள்ள முடிவெடுத்தார். சம்பவத்தன்று இரவு தனது மகனின் பேன்ட், டிசர்ட்டை போட்டுக் கொண்டு நள்ளிரவு வாக்கில் தமிழரசன் வீட்டுக்கு கையில் அரிவாளுடன் சென்றார்.


அங்கு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்துக் கிடந்த தமிழரசனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ஒரு வெட்டு நடுமண்டையில் விழுந்துள்ளது. அவர் அலறித் துடிக்கவே, தமிழரசனின் தாயார் ஓடி வந்து தடுக்கப் பார்த்தார். கொலை வெறியில் இருந்த சரோஜா,  அவரையும் சரமாரியாக வெட்டினார். இருவரின் குரல் கேட்டு ஊரே ஓடி வந்து விட்டது.


போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து சரோஜாவைக் கைது செய்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழரசனையும், அவரது தாயாரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சரோஜா போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், பாராட்டி, சீராட்டி வளர்த்த எனது மகளை கொலை செய்த தமிழரசன் சிறையில் இருந்து மூன்று மாதங்களில் வெளியே வந்து விட்டார்.  இது எனக்குப் பொறுக்கவில்லை. எனது மனது ஆறவில்லை. அவனைக் கொன்றால்தான் எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் என்று முடிவு செய்து கொலை செய்ய முடிவெடுத்தேன். 


தமிழரசன் வீட்டில் முன்பு கட்டிலில் படுத்து உறங்கிய போது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் போர்வையை இழுத்து தமிழரசன் தானா என கேட்டேன். அதற்கு அவர் நீங்க யாரு என்று கேட்டார். அதற்கு நான் உன் மாமியார்டா என்று ஆவேசமாக கூறியபடி வெட்டித் தள்ளினேன். தடுக்க வந்த அவரது தாயையும் வெட்டினேன் என்று கூறியுள்ளார்.


மகளின் சாவுக்காக மருமகனை ஆண் வேடத்தில் வந்து நடு ராத்திரியில் சரமாரியாக வெட்டித் தள்ளிய பெண்ணால் ஆண்டிமடமே பரபரப்பாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்