முழு அரசு மரியாதையுடன்.. எம்எஸ் சுவாமிநாதன் உடல் தகனம்!

Sep 30, 2023,01:42 PM IST

சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடல் தகனம் இன்று முழு அரசு மரியாதைகளுடன் நடந்தது.


முன்னதாக எம்.எஸ். சுவாமிநாதன் இறுதிச் சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.


சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசண், பத்ம விபூசண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.


உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் -வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.


எம்.எஸ். சுவாமிநாதன் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலிருந்து, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு தரப்பினரும் அவரது பூத ஊடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.


அதன் பின்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்