மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை, கலீனா, செம்பூர், ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மழை நீர் உள்ள குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது மும்பையில் பல பகுதிகளில் இருந்தும் நீர் வரத்து அதிகரித்து வருவதால் மித்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக மும்பை அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. அதேபோல் மும்பையில் குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் ஒன்றான விஹார் ஏரியும் தற்போது பெய்யும் கனமழை காரணமாக நிரம்பி உள்ளன. இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் ஊர்ந்து செல்கின்றன.
தற்போது மும்பையில் தண்ணீர் வெளியேறக்கூடிய பகுதியை சீரமைக்கும் பணிகளை பணியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
அதேபோல் புனேயில் பெய்து வரும் கனமழை காரணமாக கதக்வஸ்லா அணையிலிருந்து தற்போது தண்ணீர் வெளியேற்றப்படுகிறது கனமழையால் புனேவில் உள்ள ஏக்ஸா நகர், மற்றும் வித்தால் நகர் முழுவதும் தண்ணீர் நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக புனே புறநகர் பகுதியான அதர்வாடி கிராமத்தில் கன மழையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பல்காரில் தொடர் கனமழை எதிரொலியாக உடனடியாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}