அண்ணாமலை Vs சீமான்... பாஜக தனித்துப் போட்டியிடட்டுமே.. சீண்டும் நாம் தமிழர்!

Sep 03, 2023,01:02 PM IST

சென்னை: ரொம்ப நாட்களாகவே சீமான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.. எல்லாக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுங்க.. யார் பெரியவர்னு பார்த்துடலாம்னு..  இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சீண்டி அக்கட்சியினரிடம் விவாதத்தில் சிக்கியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


சீமானை கூட்டணியில் சேர்க்க ஆள் இல்லை. வெறுப்புக் கொள்கையை வைத்துக் கொண்டு நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது. நான் சீமான் சவாலை ஏற்கிறேன், பாஜக கட்சி அடுத்த தேர்தலில்  நாம் தமிழர் கட்சியை விட ஒரு சதவீதம் அல்ல.. 30 சதவீத வாக்குகளை கூடுதலாக வாங்கிக் கட்டும் என்று பேசியிருந்தார் அண்ணாமலை.




இதையடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் "தனித்துப் போட்டி" என்ற விவாதம் கிளம்பியுள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் இந்த விவாதத்தை மீண்டும் அனல் பறக்க விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.


"நாங்கள் ஆரம்பத்திலிருந்தே தனித்துதான் போட்டியிடுகிறோம். தமிழ்நாட்டில் தனது கொள்கைகளை தைரியமாக முன்வைத்து தேர்தலில் யாருடனும் அணி சேராமல் போட்டியிட்டு வரும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். மேலும், பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுத்து சம அளவில் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரே கட்சியும் நாம் தமிழர் கட்சிதான். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் எங்களது கொள்கைகளை மட்டுமே தைரியமாக சொல்லி வாக்கு கேட்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்.


தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறும், கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும், பெண்களுக்கு உரிய மரியாதை, பிரதிநிதித்துவம் தராத கட்சிகளுக்கு நாங்கள் சவால விடுகிறோம்.. எங்களைப் போலவே எல்லோரும் தனியாக நிற்கட்டும், தனித்துப் போட்டியிடட்டும்.. அப்போது ஜெயித்துக் காட்டட்டும்" என்று நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்துள்ளனர்.




குறிப்பாக அண்ணாமலையை அவர்கள் சவாலுக்கு இழுத்துள்ளனர். பாஜக தனித்துப் போட்டியிட தைரியம் இருக்கிறதா.. சீமானுடன் போட்டியிட அண்ணாமலை தயாரா.. நாங்க தயார்.. வாங்க எங்களை மாதிரி உங்களது கொள்கையை பகிரங்கமாக சொல்லி தனித்துப் போட்டியிடுங்க.. வாக்கு வாங்கிக் காட்டுங்க ஒத்துக்கிறோம் என்று அவர்கள் பதில் சவால் விட்டு வருகின்றனர்.


தமிழ்நாட்டைப் பொறுத்துவரை தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவது என்பது தற்கொலைக்குச் சமமானது. திமுக, அதிமுகவே தனித்துப் போட்டியிட அஞ்சிய காலம் உண்டு. ஜெயலலிதா இருந்தபோது ஒரு முறை அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது. ஆனாலும் கூட ஜாதிப் பிரதிநிதித்துவம், சில ஜாதிக் கட்சிகளை உடன் சேர்த்துக் கொண்டு அவர்களையும் அதிமுக சின்னத்தில் போட்டியிட வைத்துத்தான் அக்கட்சி வென்றது. ஜாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை கனவிலும் கூட நடக்க முடியாதது. அதற்கு எந்தக் கட்சியும், திமுக உள்பட.. யாருமே தயாரில்லை என்பதே நிதர்சனம்.


திமுக முதல் பாஜக வரை, நாம் தமிழர் முதல் கம்யூனிஸ்ட் கட்சி வரை ஜாதிகளுக்கும்,பிராந்திய முக்கியத்துவத்துக்கும் மதிப்பளிக்காமல் தேர்தல்களை சந்திக்க முடிவதில்லை, அவர்கள் தயாரும் இல்லை. இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையிலான இந்த சவால், பதில் சவால் எழுந்துள்ளது.




சீமான் ஆரம்பத்திலிருந்தே தனித்துதான் போட்டியிட்டு வருகிறார். எல்லோரையும் தனித்துப் போட்டியிடுங்க என்றும் சவால் விட்டு வருகிறார். தேமுதிக உருவானபோது ஒருபோதும் யாருடனும் சேர மாட்டோம். ஆண்டவனுடனும், மக்களுடனும் மட்டும்தான் கூட்டணி என்று விஜயகாந்த் கூறினார். மக்களும் அதை நம்பினர். வாக்களித்து அக்கட்சிக்கு அங்கீகாரம் அளித்தனர். ஆனால் அதன் பின்னர் விஜயகாந்த் வார்த்தை மாறினார், தடம் புரண்டார், அதிமுகவுடன் சேர்ந்தார்.. அரசியலில் மதிப்பிழந்து போனார் என்பது நினைவிருக்கலாம்.


தற்போதைய சூழலில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு கட்சி, தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு வருகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். வரும் நாட்களில் அண்ணாமலை  - சீமான் இடையிலான வார்த்தை மோதல்கள், கருத்து விவாதங்கள் எந்த அளவுக்கு சூடாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

news

ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!

news

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

news

தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!

news

"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

news

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு

news

"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

news

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்

news

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்