சென்னை: மலையாளப் படம் ஒன்றிற்கு நடிகர் திலகம் என்று பெயர் வைத்திருந்தனர். இந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி பேரவை படக் குழுவுக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து அந்தப் பெயரை படக் குழு தற்போது மாற்றி விட்டது.
நடிகர் திலகம் (Nadikar Thilakam) என்ற பெயரில், ஜீன் பால் லால் இயக்கத்தில், டொவினோ தாமஸ் நடிப்பில், மலையாளத்தில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.
இதுகுறித்து அறிந்ததும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் கடிதம் அனுப்பியிருந்தார்.

நடிகர் திலகம் - இது வெறும் பெயரல்ல.... எங்கள் உயிர் மூச்சு.. இது வெறும் பட்டம் அல்ல, தமிழ் சினிமாவின் உயிரெழுத்து. நடிகர் திலகம் என்ற பட்டம் தமிழ் சினிமாவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து மறைந்த கலை உலகின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ரசிகர்கள் அளித்த அடைமொழி. எனவே இந்த டைட்டிலை மாற்றிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் சந்திரசேகரன்.
"எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நடிகர் திலகம் என்ற திரைப்படத் தலைப்பை “நடிகர்“ என்று மாற்றி வைத்ததற்கு உலகெங்கிலும் வாழும் நடிகர் திலகத்தின் சார்பிலும், நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}