கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடிய கடக ராசிக்காரர்களுக்கு பிறக்க போகும் 2025ம் ஆண்டு பணவரவை அள்ளித்தரும் ஆண்டாக இருக்க போகிறது. முயற்சிகளால் முன்னேற்றம் காண வேண்டிய ஆண்டு இது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் ஏற்றம் பெறலாம். கடன் வாங்குவதை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு நிலம், வீடு வாங்கும் யோகம் அமையும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும். எதிலும் கடும் உழைப்பை போட வேண்டி இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் சாதகமான சூழல் இருக்கும். உண்மையாக உழைத்தால் செல்வாக்கு அதிகரிக்குள். இதுவரை தடைப்பட்ட பதவி உயர்வுகள் இனி படிப்படியாக கிடைக்கும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும். எப்போதும் தைரியத்தை தளர விடாமல் இருப்பது நல்லது. புதிய பொறுப்புகள் தேடி வந்தால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.
குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்க வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். பணவரவு நன்றாக இருக்கும். ஆடம்பரங்களை தவிர்ப்பதால் சேமிப்பை அதிகரிக்க முடியும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது அலட்சியம் கூடாது. செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். புதிய மாற்றங்களை செய்ய திட்டமிடுவீர்கள்.
அரசுத்துறையில் உள்ளவர்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. அரசியல்வாதிகள் பேசும் போதும், எதிலும் கையெழுத்திடும் போதும் நிதானமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு திடீர் யோகங்கள் தேடி வரும். வாகன பயணத்தில் கவனச்சிதறல் கூடாது. ரத்தம், நரம்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். பெண்களுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம் : சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதால் பண வரவுகளில் இருக்கும் தடைகள் விலகி, முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
நீ பார்த்த பார்வை.. When I looked into your eyes!
ஒரே நாளில் உருவானதல்ல.. ரோம சாம்ராஜ்ஜியம்.. ROME WASN'T BUILT IN A DAY
Vaikunda Ekadashi: சொர்க்கவாசல் நாயகனே.. கோவிந்தா கோவிந்தா!
மறக்கக் கூடாத நம்மாழ்வார்.. இயற்கை வேளாண்மையைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்!
ச்சும்மா.. சோம்பேறித்தனம்!
{{comments.comment}}