அனைவரிடமும் சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் அனைத்திற்கும் பிளான் பி என சொல்லப்படும் மாற்று ஏற்பாடு ஒன்றையும் மனதில் வைத்திருக்கக் கூடியவர்கள் கன்னி ராசிக்காரர்கள். அனைவருக்கும் உதவி செய்யக் கூடிய குணமும், தயாள குணமும், இளகிய மனமும் கொண்டவர்கள் கன்னி ராசிக்காரர்கள். இவர்களுக்கு 2024 ம் ஆண்டு பேரதிர்ஷ்டத்தை தரக் கூடிய ஆண்டாக அமைய போகிறது.
ஒவ்வொரு செயலிலும் ஞானம் இருக்கும்
.jpg)
இந்த ஆண்டு முழுவதும் கேது பகவான் ஜென்மத்திலேயே இருக்கிறார். மோட்சகாரகன், ஞானகாரகன் என சொல்லக் கூடியவர் கேது பகவான் என்பதால் இந்த ஆண்டு உங்களுடைய ஒவ்வொரு செயலும் ஞானத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும். கடவுள் சிந்தனை, அறம், பொருள் இவற்றை மனதில் வைத்து தான் ஒவ்வொரு காரியத்தையும் செய்வீர்கள்.
ராகு பகவான் 7ம் பாவத்தில் உள்ளார். இதனால் திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமண பாக்கியம் கை கூடும். 6ம் பாவத்தில் இருக்கும் சனி பகவான் உடல் உபாதைகள் சிலவற்றை தரலாம். இருந்தாலும் மே மாதம் 01 ம் தேதிக்கு பிறகு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு வந்த பிறகு, உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தி ஆகும். அதற்கு பிறகு அமோக வளர்ச்சிகளும் இருக்கும்.
பண வரவு உண்டு
2,9 ம் அதிபதியான சுக்கிர பகவான் இந்த வருடம் முழுவதும் நேர்கதியில் பயணிக்க போகிறார். இதனால் பணவரவுகள் ஏற்படும். பொருளாதாரம் உயரும். மந்தநிலைகள் மாறும். நீண்ட நாட்களாக பணம் வருவது தடை பட்டு இருந்தால் அவற்றை வரவைக்கும். பூர்வீக சொத்துக்கள் தானாக வந்து சேரும்.
அரசு பணியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, அரசு துறைகளிலே இருந்தாலும் சரி, அரசியலில் இருந்தாலும் சரி உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை கூடும். பதவி உயர்வுகள் கிடைக்கும். பணி நிரந்தரம் அமையும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் அமோக பலன்களை தருவாக இருக்கும். இந்த வருடத்தில் செவ்வாயின் வக்கிர காலத்திலே உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும்.
கணவன் மனைவி – கதையும் மனையும் !
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்
துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!
அபாயகரமான ஆயுதத்தைக் கையில் எடுத்த நிர்மலா சிஸ்டர் (சீதா 3)
நாயகன் மீண்டும் வர்றார்.. ரோபோ சங்கருக்கு மரியாதை செய்யும் சென்னை கமலா தியேட்டர்!
ஐப்பசி மாத பெளர்ணமி.. சகல சிவாலய அன்னாபிஷேகம்.. சிவாலயங்களில் விசேஷம்!
30 ஆண்டுகளுக்கு மேல் மண்ணோடும் மக்களுடன் இருப்பவர்... விஜய் தமிழக மக்களின் நம்பிக்கை: புஸ்ஸி ஆனந்த்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் தங்கம் விலை... நேற்று மட்டும் இல்லங்க... இன்று குறைவு தான்
{{comments.comment}}