புத்தாண்டு ராசி பலன்கள் 2024 : கும்ப ராசிக்காரர்களே.. பணவரவு, வீடுயோகம், மனமகிழ்ச்சி.. காத்திருக்கு!

Dec 31, 2023,12:13 PM IST

எந்த செயலில் ஈடுபட்டாலும் முழு மனதுடன், திருப்பதிகரமாக செயலாற்றக் கூடிய கும்ப ராசிக்காரர்களே... உங்களுக்கு பிறக்க போகும் 2024 ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ல் ஜென்மத்தில் சனி இருக்கிறார் என்கின்ற பயம் வேண்டாம். சனி பகவான் உங்களின் ராசிநாதன் என்பதால் உங்களுக்கு நன்மையையே அதிகம் தர போகிறார். 2,11 க்கு அதிபதியாக இருக்கக் கூடிய குரு பகவான் 3ம் பாவத்தில் இருப்பதால் மாற்றங்கள், ஏற்றங்கள், மனஆறுதல்க, மனமகிழ்ச்சிகள், முன்னேற்றங்கள் ஆகியவற்றை வழங்க போகிறார்.


2ம் பாவத்தில் ராகு இருப்பதால் பணவரவுகள் அதிகரிக்கும். 8ம் பாவத்தில் கேது பகவான் இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. மே மாதம் 01ம் தேதிக்கு பிறகு குரு பகவான் 5ம் பாவையாக கேதுவை பார்க்கிறார். இதனால் கேதுவால் ஏற்படக் கூடிய கெடு பலன்கள் நீங்கி விடும்.




4ம் பாவத்திற்கும், 9ம் பாவத்திற்கும் அதிபதியான சுக்கிர பகவானால் இந்த வருடம் நன்மைகள் அதிகமாகவே நடக்கும். வீடு வாங்க வேண்டும் என்பவர்களுக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்துக்களில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் நீங்கும். வேலைக்கு சென்று பொருள் ஈட்டக் கூடிய அமைப்பும் இந்த ஆண்டில் ஏற்படும். 


7 ம் அதிபதியாக இருக்கக் கூடிய சூரிய பகவான், 11ம் பாவத்தில் இருந்து குருவின் பார்வையை வாங்குவதாலும், 7 ல் இருக்கக் கூடிய சந்திரனின் பார்வையும் கிடைப்பதாலும் திருமணம் ஆக வேண்டியவர்களுக்கு திருமணம் நடைபெறும். திருமணமாகி கணவன்- மனைவி பிரிந்து இருந்தால் மீண்டும் ஒன்று சேருவதற்கான அமைப்பு ஏற்படும்.


வாழ்க்கை துணைக்கும் உங்களுக்கும் நல்ல புரிதல், மன ஒற்றுமை ஆகியவை ஏற்படும். 9ம் பாவத்தில் இருக்கக் கூடிய சுக்கிர பகவானின் சஞ்சாரமும் நன்றாக இருக்கக் கூடியதால் செலவுகளும் அதிகரிக்கலாம், உல்லாச பயணமும் சென்று வரலாம். முடிந்த வரை சுப செலவுகளாக செய்து கொண்டால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். குரு பகவான் 3ம் இடத்தில் இருப்பதால் நல்ல மன மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். ஜூலை முதல் செப்டம்பர் வரை சனி பகவான் வக்கிர கதியில் செல்வதால் அந்த சமயத்தில் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது அவசியம். 


குரு பகவானின் வக்கிர காலம் உங்களுக்கு நன்மைகளையே வழங்குகிறது. 4ம் இடத்தில் வக்கிரம் அடைவதால் வெளிநாடுகள், வெளியூர்கள், வெளிமாநிலங்கள், கடல் கடந்து செல்லக் கூடிய பிரயாணங்கள் நன்மைகளை ஏற்படுத்தும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை குரு பகவான் நல்ல அமைப்புகளை உங்களுக்கு தருவார்.


புதன் பகவான் 2, 6, 10 ஆகிய பாவங்களில் மூன்று முறை இந்த ஆண்டு வக்கிரம் அடைவதால் இந்த காலங்களில் நீண்ட நாட்களாக கடனாக கொடுத்து வராமல் இருந்த பணம் வரும். கடன் கிடைக்கும். கடன் வாங்கி தொழில் செய்வது, வீடு வாங்குவது, வாகனம் வாங்குவது, தொழில் அபிவிருத்தி செய்வது ஆகிய வாய்ப்புகள் ஏற்படும். நவம்வர் -டிசம்பர் மாதங்களில் 10ம் பாவத்தில் வக்கிரம் அடைவதால் உடல் உபாதைகள் ஏற்படும். தொழில் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.


2024ம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் முருகப் பெருமானை வழிபட வேண்டும். செவ்வாய்கிழமையில் சிவப்பு நிற மலர்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்த வழிபடலாம். முருகப் பெருமானுக்குரிய ஓம் சரவண பவ மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் நல்ல யோக பலன்களை பெற முடியும். முடிந்தவர்கள் செவ்வாய்கிழமையில் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம். கந்தசஷ்டி, திருப்புகழ் போன்றவற்றை படிப்பது மிகவும் விசேஷம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்