டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

May 24, 2025,01:46 PM IST

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு ஆண்டுதோறும் நிதி ஆயோக் கூட்டத்தை நடத்தி வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் நிதி ஆயோக். தேசிய வளர்ச்சியில் மாநிலங்களிடையே பங்கு, அரசின் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி ஆயோக் அமைப்பு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.




கடந்த 2015ம் ஆண்டு முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அதன்படி இந்த கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டம் 10வது கூட்டமாகும். 


இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை கடந்த ஆண்டு புறக்கணித்த தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் இந்தாண்டு கலந்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில், 20 மாநில முதல்வர்களும் 6 யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொண்டனர்.


மாநிலங்களை ஒருங்கிணைத்து வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கான `டீம் இந்தியா' என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டிற்கு இணங்க கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடு எதிர்கொள்ளும் சவால்கள், மாநிலங்களை முக்கிய பங்காளர்களாக கொண்டு வளர்ந்த பாரதம் உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, கல்வி நிதி, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்று மாலை பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்