"துணை முதல்வர்".. ஆசையெல்லாம் இல்லை.. பட்டென்று சொன்ன உதயநிதி.. அப்ப "அந்த கனவு" இருக்கோ!!

Nov 28, 2023,01:40 PM IST

சென்னை: துணை முதல்வர் பதவி மேல் எனக்கு ஆசையில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதைப் பார்த்து பலரும் அப்படியென்றால் நேரடியாக முதல்வர் பதவிக்கு உயரும் ஆசை உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளதா என்று வேடிக்கையாக கேட்டு வருகின்றனர்.


திமுகவைப் பொறுத்தவரை... உழைப்புக்கு உரிய பலன் அதற்கான நேரம் வரும்போது தரப்படும்.. இதுதான் காலம் காலமாக அங்கு வழக்கம். பிற கட்சிகளை விட இங்கு உழைப்பாளிகள் அதிகம்.. எனவே சீனியர்களும் அதிகம்.. பதவிக்காக காத்திருப்போரும் அதிகம்.


கருணாநிதி இருந்தவரை மு.க.ஸ்டாலின் மிக மிக நிதானமாகத்தான் ஒவ்வொரு பதவியையும் அடைய முடிந்தது. ஸ்டாலின் மிக நீண்ட காலம் இளைஞர் அணி செயலாளராகவே இருந்து வந்தார். பிறகுதான் படிப்படியாக மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என்று உயர்ந்தார். அதேபோல கட்சியிலும் கூட அவர் ஒவ்வொரு பதவியையும் மிக மிக தாமதமாகத்தான் பெற்றார்.




ஆனால் உதயநிதி ஸ்டாலின் விஷயத்தில் இது தலைகீழாக உள்ளது. எல்லாமே இப்போது வேகமாக நடக்கிறது. கருணாநிதி அரசியல் டெஸ்ட் கிரிக்கெட் என்றால், ஸ்டாலின் அரசியல் டி20 போல உள்ளது. உதயநிதி ஸ்டாலின் முதலில் எம்எல்ஏ ஆனார். அதே வேகத்தில் இளைஞர் அணி செயலாளர் ஆனார். அதை விட வேகமாக அமைச்சரானார். இப்போது அடுத்து என்ன பதவி என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அவரது அரசியல் வளர்ச்சி.


விரைவில் அவர் துணை முதல்வராக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சமீப காலமாகவே அதுகுறித்த பேச்சும் வலுவாக அடிபட்டு வருகிறது. ஆனால் தனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நேற்று உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள். இதை திமுகவினர் சிறப்பாக கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் பேசுகையில், துணை முதல்வர் பதவி குறித்த கேள்வியை எழுப்பினர். அதற்கு உதயநிதி ஸ்டாலின், அந்த ஆசையெல்லாம் எனக்கு இல்லை என்றார் சிரித்துக் கொண்டே.


இது சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகியுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை வேண்டாம் என்றால் அது வேண்டும் என்றுதான் கோட் வேர்ட் என்று சிலர் கிண்டலடித்துள்ளனர். அதேசமயம், பலர், துணை முதல்வர் பதவியெல்லாம் எதுக்கு.. நேரடியாக முதல்வர் பதவிக்கு உயர உதயநிதி ஸ்டாலின் விரும்புகிறாரா என்று ஜாலியாக கேட்டுள்ளனர். அதற்கான தகுதி அவருக்கு உண்டு என்றும் பலர் உதயநிதிக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.


இன்னொரு விஷயமும் ரொம்ப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. அதாவது முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலுக்குச் செல்லும் திட்டம் உள்ளதாகவும், அவர் அப்படி தேசிய அரசியலுக்குப் போனால், மாநில அரசியலும், ஆட்சியும் உதயநிதி ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது. அப்படி நடந்தால் முதல்வர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் அமர வைக்கப்படக் கூடும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையாகும் என்று தெரியவில்லை. 


அரசியலைப் பொறுத்தவரை எதையும் மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது.. நடக்கும்போது தெரிந்து கொள்வோம்.. அதுவரை காத்திருப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்