சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழைக்கு இப்போது பிரேக். அடுத்து 9 நாட்களுக்குப் பிறகுதான் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்திருந்தது. திரும்பிய திசையெல்லாம் சூப்பரான மழை பெய்து வந்தது. எந்த இடத்திலும் மக்களை பாதிக்காத அளவுக்கு அருமையான மழையை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களும் அனுபவித்தன. சென்னையெல்லாம் கிட்டத்தட்ட ஊட்டி, கொடைக்கானல் போல இருந்தது. அவ்வப்போது குட்டி குட்டியாக மழை பெய்து மக்களை குஷியில் ஆழ்த்தியிருந்தது.

இது போக நெல்லை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கன மழை வரையிலான மழைப் பொழிவு இருந்தது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை இல்லை. குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை சுத்தமாக இல்லை. வெயில்தான் அடிக்கிறது. அவ்வப்போது மோடமாக இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 9 நாட்களுக்கு சென்னையில் மழையை எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 27ம் தேதி வரை காலை நேரங்களில் லேசான பனியையும் நாம் காண முடியும். பகல் நேரங்களில் வறண்ட வானிலையே நிலவக் கூடும். குளிராகவும் இருக்கலாம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு மாவட்டங்களில் இது குளிர் காலமாகவே இருக்கும்.
அடுத்த சில நாட்களுக்கு தென் கோடி தமிழ்நாட்டில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பிரதீப் ஜான்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}