பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு

Jan 09, 2026,05:57 PM IST

சென்னை : ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்ததுடன், அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்ச். மேலும் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


விஜய் நடித்த ஜனநாயகன் படத்தில் பாதுகாப்பு துறையின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டது உள்ளிட்ட சில காரணங்களுக்காக அந்த படத்திற்கு தணிக்கை குழு சான்று வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது. சென்சார் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க வேண்டும் என முடிவு செய்த நிலையில் ஒருவர் மட்டும் எதிராக புகார் தெரிவித்ததால் படத்தை மறு ஆய்வு செய்ய சென்சார் போர்டு உத்தரவிட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியதால் படக்குழு சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தது.




ஜனவரி 09ம் தேதி காலை 9 மணிக்கு ஜனநாயகன் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அவசர வழக்கு மீதான வழக்கின் தீர்ப்பும் இன்று காலைக்க ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை முதல் வழக்காக ஜனநாயகன் வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு யு/ஏ சான்று வழங்க உத்தரவிட்டார். ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு, தவறான முன்னுதாரணம் என கூறி இருந்தார். இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக சென்சார் போர்டு தெரிவித்தது.


இந்த மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ப்படும் என கூறப்பட்ட நிலையில், இன்று பிற்பகலிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சென்சார் போர்டு சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். காலையில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், உடனடியாக அவசரமாக மேல்முறையீடு செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பதில் மனு தாக்கல் செய்ய தங்களுக்கு அவகாசம் அளிக்கப்படாததால் மேல்முறையீடு செய்ததாக சென்சார் போர்டு முறையிட்டது. 


பிறகு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்க வேண்டும் என காலையில் அளித்த தீர்ப்பை தடை செய்து, ரத்து செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 21ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஐகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. இதனால் பொங்கலுக்கு ஜனநாயகன் படம் ரிலீசாகாது என்பது உறுதியாகி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்