குடை ரெடியா.. 3 நாளில் வருது வட கிழக்கு பருவ மழை!

Oct 19, 2023,05:05 PM IST
சென்னை: வடகிழக்கு பருவமழை இன்னும் 3  நாட்களில் தொடங்கவுள்ளதாக சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது வரை பெய்து வந்த தென் மேற்குப் பருவ மழை இன்றுடன் விடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் தென் மேற்குப் பருவ மழை விலகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 8 சதவீதம் அளவுக்கு மழை கிடைத்துள்ளது.  இந்த வருடம் பெய்த தென்மேற்கு பருவ மழை காலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த தென்மேற்கு மழை பொழிவைக்காட்டிலும், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழை அதிகளவில் பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.



இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 3 நாட்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால் வடகிழக்கு பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்