சென்னை: கூட்டணி அழைப்பிற்கு நன்றி. எங்களது பயணம் எங்கள் கால்களை நம்பிதானே தவிர அடுத்தவர் தோள்களை நம்பி அல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்சி இன்னொரு கட்சியை கூட்டணிக்கு அழைப்பது என்பது இயல்பு தான். நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தேர்தல் அரசியல் கட்சி அரசியில் செய்கிறவர்கள் கூட்டணியை தேடி போவார்கள். நாங்கள் முழுக்க முழுக்க மக்கள் அரசியல் செய்கிறவர்கள். மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகள். அதனால் மக்களோடு சேர்ந்து தான் தேர்தலை சந்திப்போம்.

தொடர்ச்சியாக 4 முறை 2 சட்டமன்ற தேர்தல், 2 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 5வது முறையாக ஒரு கட்சி தனித்து போட்டியிவது என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். வெற்றி, தோல்வியை தாண்டி தனித்து போட்டியிடும் கட்சி தான் நாம் தமிழர். நாங்கள் மக்களை தேடி சென்று மக்களுக்காக அரசியல் செய்கிறோம்.கூட்டணி எங்கள் கொள்கை அல்ல. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பி தான். அடுத்தவர் கால்கள், தோள்களை நம்பினால் எங்கள் இலக்கின் பயணத்தை அடைய முடியாது.
எங்கள் விடுதலை எங்களை நம்மி தான். பிறர் தோள்களில் ஏறி நின்று உயரத்தை காட்டுவதை விட, தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்டுவதே மேலானது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிடுவேன். அதில், 117 பெண்களுக்கு வாய்ப்பு, 117 ஆண்களுக்கு வாய்ப்பு . தவெக தலைவர் விஜய் எதார்த்தமானவர். விஜய் இப்தார் நோன்பின் பங்கேற்றதில் உள் நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை. விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை இன்றும் உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை உயர்வு!
மார்கழி 02ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 02 வரிகள்
Healthy Cooking: சுவையான மிளகு குழம்பு செய்வது எப்படி?
சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!
ஆணுக்கு சமமாய் நானும் தான்!
The Power of Hope... நம்பிக்கையின் சக்தி.. பலம் தரும்.. சவால்களைச் சந்திக்க தைரியம் தரும்!
கோவிந்தனை கொண்டாடுவோம்.. கோகுலத்தில் விளையாடுவோம்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆறுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.. ஏன் தெரியுமா?
மார்கழி மாதம் முதல் பிரதோஷம் இன்று.. அதன் சிறப்புகள் தெரியுமா?
{{comments.comment}}