பெரியாரை ஏற்க மாட்டேன்.. இப்பதான் தொடங்கியுள்ளேன்.. போகப் போக நிறைய உள்ளது.. சீமான்

Feb 10, 2025,06:07 PM IST

திருச்சி:   யார் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்


திருச்சிக்கு வந்த சீமான் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:




நாம் தமிழர் கட்சியினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. ஆனால், திமுக தனித்து நின்று வாக்குகளை பெறவும் முடியாது, பணம் கொடுக்காமல் வாக்குகளை பெறவும் முடியாது. 


தனித்து வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை அதிமுக அல்லது பாஜகவின் வாக்குகள் என முத்திரை குத்துகிறது திராவிடம். 15 கட்சிகளிடம் கூட்டணி வைத்து வாக்குகளை பெறுகிற திராவிடம் தான் இப்படி பேசுகிறது. பாஜகவினர் எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும். அதிமுகவினர் நான் வளர வேண்டும் என விரும்புவார்களா? அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்களது வாக்குகள் கிடைக்கும்.


ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் ஆயிரம் வாக்குகள் தேவை. அவ்வளவுதான். என்னுடைய கோட்பாடு இந்தியா மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. நாங்கள் சத்தியத்தில் பக்கம் நிற்பவர்கள். என்னால் முடியவில்லை எனில் எனக்கு பின்னால் வரும் பிள்ளைகள் வெல்வார்கள். 


நான் திராவிடத்தில் இருந்து வந்தவன். இப்பொழுது தெளிவு பிறந்ததால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்களது கொள்கைக்கானவர்கள் அல்ல. நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரைப் படித்து விட்டு பேசுகிறேன். என் கேள்விக்கு தான் பதில் சொல்ல வேண்டும். யார் பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நான் பெரியாரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்னுடைய தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பெரியாரை ஏற்றுக்கொள்ளும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகி செல்லலாம்.


நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். ஆங்கிலேயர் ஆட்சியில் தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இப்போது நடத்த முடியாமல் போய்விடுமா என்ன? பெரியார் என்பது எங்களுக்கு தேவையில்லை. உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னை பின்பற்றுகிறவர்கள் பெரியார் வேண்டும் என்றால் என்னை விட்டு வெளியேறி போய்விடலாம். 


கடந்த முறை நோட்டாவிற்கு 797 ஓட்டு கிடைத்தது. தற்போது 6 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளது காரணம் என்ன. 42 சுயேட்சைகள் 12 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போட்டது யார்?. நான் வீரன், எனக்கு படையெல்லாம் தேவையில்லை. சண்டைக்கு தனியாக தான் போவேன். நான் புலி, தனித்து தான் வேட்டையாடுவேன். நான் துவக்கத்திலிருந்து சொல்கிறேன். நான் தனியாக தான் நிற்பேன். கோழைகள் தான் கூட்டத்தோடு நிற்பார்கள்.  கூட்டத்தோடு நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பவனுக்கு வீரமும் துணிவும் தேவை எனது கோட்பாடு தனித்துவமானது என்றார் சீமான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

“Open பண்ண வெச்சுராதீங்க..” - 'பகீர்' கொடுத்த முதல்வர் விஜய்.. அந்த பைலில் அப்படி என்ன இருக்கு?

news

மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!

news

வேறென்ன வேண்டும் எனக்கு.. அழகிய சிங்கரின் என்பா!

news

சிந்தனைச் சிதறல்..பணம்.. உழைப்பின் மதிப்பை உணர்த்தி தானும் உயரும் உயர் சாதனம்!

news

சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

news

"பாடிளம் பூதத்தினானும் பவளச் செவ்வாய்வண்ணத்தானும்".. திருநாவுக்கரசர் வரலாறு

news

கவன ஈர்ப்பு தீர்மானம் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

news

Travel story: பனம் குருத்தில் செய்த ஊறுகாய்.. இன்னும் மறக்காத நாக்கு.. என்னா டேஸ்ட்டுப்பா!

news

அனைத்து எம்எல்ஏ.,வுக்கும் கார், மதுரையில் புற்றுநோய் மருத்துவமனை…முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்