விழுப்புரம்: புலி வேட்டையாடும் போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது என்று விஜய் மற்றும் விஜய்யின் கட்சி தொண்டர்களை கடுமையாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், தவெக இல்லாத கட்சி. அவங்ககிட்ட என்னடா உங்க கொள்கைனு கேட்டா, தளபதி... தளபதினு சொல்றாங்க. எனக்கு தலைவிதி... தலைவிதினு கேக்குது. சரி எதுக்குடா வந்தீங்கனு கேட்டா, டிவிகே, டிவிகேனு கத்துறாங்க, அது எனக்கு டீ விற்க, டீ விற்கனு கேக்குது. அப்போ டீ விற்க தான் இவ்வளவு பேரு கிளம்பி வந்து இருக்கீங்கள...சரி ஓரமா போய் வித்துக்கோங்க...
புலி வேட்டையாடும்போது அணில் குஞ்சு குறுக்கமறுக்க ஓடுது. அணிலே அணிலே ஓரமா போய் விளையாடு அணிலே... குறுக்கு மறுக்குமாக ஓடாதே அணிலே. போப்பா ஓரமா போய் மரத்தில ஏறி உச்சிக்கு போ.
ஒரு மான, ஒரு காட்டெருமை, காட்டாடை அடித்து சாப்பிட்டால் புலிக்கு பெருமை. அதை விடுத்து ஒரு அணிலை அடித்து சாப்பிட்டால் புலிக்கு என்ன பெருமை. தம்பி மறுபடியும், மறுபடியும் சொல்றேன். சிவன் ஆட்டத்தை நீ சினிமாவில பார்த்திருப்ப.. இந்த சீமான் ஆட்டத்தை இனி மேல் தான் பார்ப்ப என்று தெரிவித்துள்ளார்.
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}