சென்னை: தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை தயவு செய்து மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் என டாக்டர் திவ்யா சத்தியராஜ் தனியார் மருத்துவமனை பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டாக்டர் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் நடிகர் சத்யராஜின் மகள் மற்றும் சிபிராஜின் சகோதரி. அட்சய பாத்திரம் அறக்கட்டளையின் தூதுவராக செயல்பட்டு வருபவர். இந்த அறக்கட்டளை, தமிழக பள்ளி குழந்தைகளுக்கு, இந்திய அரசின் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டு மகிழ்மதி இயக்கம் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட முடியாத ஏழை குழந்தைகளுக்கு இலவச சத்தான உணவுகளை வழங்கி வருகின்றனர். இது தவிர அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் ஏழை மக்களுக்கான விழிப்புணர்வு தகவல்களையும் பதிவிட்டு வருகிறார் திவ்யா சத்யராஜ்.
இந்த நிலையில் டாக்டர் திவ்யா சத்யராஜ் தனியார் மருத்துவமனைகள் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், எல்லோருக்கும் வணக்கம். நான் ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ். தனியார் மருத்துவமனைகள் . அதாவது பிரைவேட் ஹாஸ்பிடலில் நடக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச தான் இந்த பதிவு.
என்னுடைய டாக்டர் நண்பர்களிடம் இருந்து வந்த தகவல்கள் தான் இது. சில தனியார் மருத்துவமனைகளில் அந்த மருத்துவமனைக்கு லாபம் வர வேண்டும் என்ற நோக்கில் நோயாளிகளுக்கு தேவையில்லாத பிளட் டெஸ்ட், தேவையில்லாத ஸ்கேன், தேவையில்லாத எம்ஆர்ஐ, இதெல்லாம் பண்ண வைக்கிறார்கள். ஒரு பேஷண்ட் குணமான பிறகும் ஒன்று இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரீசார்ஜ் பண்றாங்க. பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு போனா நோய் குணமாகும் என்ற நம்பிக்கையை விட பணம் காலியாகும் என்ற பயம் தான் பேஷண்ட்டுக்கு அதிகம் இருக்கு.
எங்க அமைப்பின் மூலமாக சில நோயாளிகளுக்கு நாங்க உதவி செய்தாலும், எல்லா நோயாளிகளுக்கும் உதவி செய்வது என்பது சாத்தியப்படுத்த முடியாத விஷயம். (Patients should not treated like profit generating machines) நோயாளிகள் வருவாயை உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது. பிரைவேட் ஹாஸ்பிடல் வைத்திருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. வணக்கம் என பதிவிட்டுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}