எடப்பாடி பழனிச்சாமியை.. "நீ வா போ" என்று.. சரமாரியாக வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்!

Apr 25, 2023,09:09 AM IST
திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த ஓபிஎஸ் அணி மாநாட்டின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நம்பிக்கைத் துரோகி,  உன்னை வரலாறு மன்னிக்காது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக தாக்கிப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கமாக பொறுமையாக, நிதானமாக பேசக் கூடியவர் ஓ.பி.எஸ். மரியாதைக்குறைவாக பொது வெளியில் அவர் பேசியதும் மிக மிக குறைவு. அப்படிப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் நேற்றைய திருச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.



திருச்சி ஜி கார்னர் பகுதியில் ஓபிஎஸ் அணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்த இந்த பிரமாண்டக் கூட்டம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஓ.பி.எஸ்ஸுக்கு இவ்வளவு பெரிய கூட்டமா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மிகப் பெரிய கூட்டம் திரண்டிருந்தது.

கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமியை பிடி பிடி என பிடித்தார்.  ஓ.பிஎஸ் பேச்சிலிருந்து சில துளிகள்:

ஐயா பழனிச்சாமி அவர்களே.. உங்களுக்கு யார் பதவி கொடுத்தது. உங்களுக்கு யார் பதவி கொடுத்தது.. சின்னம்மா அவர்கள் உங்களுக்கு முதல்வர் பதவியைத் தந்தார்கள். நாம் உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து நாய்கள்.. நாய் எதையோ பார்த்து குரைக்கிறது என்று சொல்கிறீர்கள்.. எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகி.. வரலாறு உன்னை மன்னிக்குமா.. தொண்டர்களே நீங்கள் கூறுங்கள்.. மன்னிக்குமா, மன்னிக்காது. 

இப்படிப்பட்ட ஒரு ஆள் தனக்குத்தானே பொதுச் செயலாளராக தானே முடி சூட்டிக் கொண்டு, அது ஒரு கேலிக்கூத்து. புரட்சித்தலைவர் என்றால் ஒரு அடையாளம் உண்டு. அழகான தொப்பி, கருப்புக் கண்ணாடி. அந்தத் தொப்பிக்கும், கருப்புக் கண்ணாடிக்கும் அழகு சேர்த்தவரே நம்ம புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான். அதைப் போடடுக் கொண்டு கேமராவுக்கு முன்னாடி போஸ் கொடுக்கிறியே எவ்வளவு பெரிய அநியாயம், அக்கிரமம். 

நீயும் புரட்சித் தலைவரும் ஒன்றா. அவருடைய கால் தூசிக்கு நீ ஆக மாட்டாய். அவர் கருணைக் கடல், அன்பு தெய்வம், கொடை வள்ளல். இந்த இயக்கத்தை தனக்குப் பின்னால் யார் வழி நடத்த வேண்டும் என்று தீர்க்கதரிசனமாக அம்மாவை தந்த தலைவர். உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

2011 சட்டசபைத் தேரத்லுக்கு முன்பு அம்மா எங்களை அழைத்து தமிழ்நாட்டின் முக்கிமயான இடங்களில் கூட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னார். முதலில் கோயம்புத்தூர். அடுத்து திருச்சி. இந்த திருச்சிதான் இங்கு நடந்த கூட்டம்தான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது.  அடுத்த முதல்வர்  அம்மாதான் என்று தீர்மானித்த நகரம் திருச்சி. இங்கு கடல் இல்லை என்ற குறை இருந்தது.. அதை தொண்டர்களாகிய நீங்கள் தீர்த்து வைத்து விட்டீர்கள் என்று ஓ.பி.எஸ். பேசினார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்