பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் ஆடவர் 50 மீட்டர் (3பி) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது. 50மீட்டர் ரைப்பில் தொடர் 3 பிரிவுகளில் நடைபெற்றது. 3 நிலைகளில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆறாவது இடத்தில் இருந்த ஸ்வப்னில் அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று 3வது நிலைக்கு முன்னேறினார். 3 நிலையில் அதிக புள்ளிகள் எடுத்து ஸ்வப்னில் வெண்கல பதக்கம் வெற்றுள்ளார்.

29 வயதான ஸ்வப்னில் சிங் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் கடந்த 2015ம் ஆண்டு இவருக்கு இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதராக பணி கிடைத்தது. இந்த பணியில் இருந்து கொண்டே துப்பாக்கி சுடுதலிலும் பயிற்சி பெற்று வந்தார். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் காரணமாக பல வருடங்களாக பயிற்சி எடுத்து வந்துள்ளார் ஸ்வப்னில். தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மானு பக்கர் இரண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ள நிலையில், தற்போது ஸ்வப்னில் பெற்ற பதக்கத்துடன் 3 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன. பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
"எப்போ தான் சார் பேசுவீங்க?"...கேள்விகளால் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
மீண்டும் அதிரடியாக உயரும் தங்கம் விலை...போட்டி போட்டு உயரும் வெள்ளி
தங்கத்திற்கு நிகராக உயர்ந்த மல்லிகைப் பூ விலை: ஒரு கிலோ ரூ.10,000
தேமுதிக கூட்டணி...சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா...ஆவேசத்தில் ரகசியத்தை உலறிய விஜயபிரபாகரன்
கேரளா கிரைம் ஸ்டோரி (2)
இயந்திரமாகிப் போன மனிதர்கள்.. Men Become Machines and vice versa
பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!
மன்னிப்பின் சக்தி.. The Power of Apology
3 பழம்.. 2 காய்.. ஜூஸ் சாப்பிட்டுப் பாருங்க.. புற்றுநோய்க்கே நல்ல மருந்தாம்!
{{comments.comment}}