எனக்கும் டயர்டா இருக்கும்ல பிரண்ட்ஸ்.. நைட் ரவுண்ட்ஸ் வந்த இடத்தில் படுத்துத் தூங்கிய யானை!

Apr 22, 2025,04:25 PM IST

ஊட்டி: ஊட்டியில் இரவு நேரத்தில் ரோந்து வந்த ஒற்றை காட்டு யானை வீட்டுக்கு முன்பு படுத்துத் தூங்கிய காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


வேலைக்கு இடையில, கொஞ்சம் பிரேக் எடுத்த நேரத்துல மொபைல் போனை கையில் எடுத்துப் பார்த்தால் ஆச்சரியமான செய்தி கண்ணில் பட்டது. அடிக்கிற வெயிலுக்கு  வெளியில் தான் போக முடியல??  வெளியில்  என்ன தான் நடக்குதுன்னு பார்க்கலாமேன்னு பார்த்தா சுவாரஸ்யமான செய்தி அது.


வெயிலில் அலைந்தால் நமக்குத்தான் டயர்ட் ஆகுதுன்னு பார்த்தா, வாய் இல்லாத ஜீவனுங்களுக்கும் இப்படி தான் இருக்கு!!! என்னனு யோசிக்கிறீங்களா? நீலகிரி  மாவட்டத்தின் ஊட்டி வனப்பகுதியில், ஒரு யானை இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வந்துள்ளது. 




வந்த யானை அப்படியே ஒரு வீட்டின் முன்பாக,  சாலையில் படுத்து உறங்கி விட்டது. வெயில் கொடுமையால் அதற்கும் டயர்ட் ஆகி விட்டதா அல்லது வந்த களைப்பில் அப்படியே படுத்து விட்டதா என்று தெரியவில்லை. அந்த வீட்டு ஓனரும் கூட, பாவம் தூங்கிட்டுப் போகுது என்று டிஸ்டர்ப் செய்யாமல் விட்டு விட்டார். 


இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. கடுமையான வெப்பத்தினால் காரணத்தால் நடக்க இயலாமல் சாலையோரம் உறங்கியது.

இந்த நிகழ்வுகள், யானைகள் மனிதர்களின் வாழ்விடங்களுக்கு அருகில் வந்து, இயல்பான முறையில் நடக்கும் என்பதை காட்டுகின்றன. இது வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் மனிதர்கள் இடையே சமநிலை தேவைப்படுவதை நினைவூட்டுகிறது. 


இது ஒரு விதத்துல சந்தோஷத்தை அளித்தாலும் மறுபக்கம் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. காடுகளை அழித்து இப்பொழுது மக்கள் வாழ்விடமாக மாற்றும் இந்த நவீன உலகத்தில் வாயில்லாத ஜீவன்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வருத்தம்தான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்

news

நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்

news

களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

news

உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!

news

எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)

news

2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

news

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

news

செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்