அமிர்தசரஸ்: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் வீசியதாக கூறப்படும் ராக்கெட் பாகங்கள், அமிர்தசரஸ் அருகே கிராமப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள துதலா, ஜெதுவால், பந்தேர் ஆகிய மூன்று கிராமங்களில் அடையாளம் தெரியாத ஏவுகணை பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது உள்ளூர் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அமிர்தசரஸ் ரூரல் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனீந்தர் சிங் அளித்த பேட்டியில், கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் ராக்கெட்டுகள் என்று உறுதிப்படுத்தினார். உடனடியாக இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சிறப்பு குழு விரைந்து வந்து ஏவுகணைகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனீந்தர் சிங் இது குறித்து கூறுகையில், எங்கள் குழுக்கள் அந்த பகுதிகளை பாதுகாத்து ராணுவத்திற்கு தகவல் கொடுத்தன. ராணுவ நிபுணர்கள் விரைந்து வந்து அந்த பொருள்கள் ஏவுகணைகள் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை, உயிர் சேதமும் இல்லை என்று தெரிவித்தார்.
அமிர்தசரஸில் அதிகாலை 1:02 மணி முதல் 1:09 மணி வரை ஆறு முறை பலத்த வெடி சத்தம் கேட்டதாக செய்திகள் வந்தன. இந்த சத்தங்கள் ஏவுகணை சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக நகரத்தில் மின்சாரத்தை நிறுத்தி, இருட்டடிப்பு செய்தனர்.
இந்த சத்தங்கள் சோனிக் பூம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறை முதலில் கூறியது. ஆனால், ஏவுகணைகள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை கொடுக்கப்படவில்லை. அமிர்தசரஸில் அன்று இரவு இரண்டு முறை மின்சாரம் தடைபட்டது. முதல் முறை இரவு 10:30 மணி முதல் 11:00 மணி வரை மின்சாரம் தடைபட்டது. இரண்டாவது முறை அதிகாலை 1:56 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. இந்த தடை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்தது. அதிகாலை 4:30 மணிக்கு மின்சாரம் முழுமையாக சரி செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
{{comments.comment}}