Operation Sindoor.. வருஷத்துக்கு 1000 தீவிரவாதிகளை உருவாக்கும் முரித்கே லஷ்கர் முகாம்!

May 07, 2025,10:22 AM IST

சண்டிகர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள் உள்ள ஒரு முக்கிய நகரம்தான் முரித்கே. இந்த நகரில் உள்ள மிக முக்கியமான தீவிரவாத முகாமைத்தான் இந்தியப் படைகள் இன்று நடத்திய அதிரடித் தாக்குதலில் தாக்கி அழித்துள்ளன.


பாகிஸ்தானின் முக்கியமான நகரங்களில் ஒன்று முரித்கே. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஷேக்குபுரா மாவட்டத்தின் தலைநகர்தான் முரித்கே. லாகூருக்கு மிக அருகில் உள்ள நகரம் இது.  இந்த நகரிலிருந்து பல முக்கியமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகியுள்ளன.


இப்படி பல பெருமைகள் இருந்தாலும் கூட, மிக கருமையான ஒரு இருண்ட முகத்தையும் இந்த நகர் கொண்டுள்ளது. அந்த கருப்பு முகத்தைக் கொடுத்தவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள். முரித்கே நகரில் மிகப் பெரிய தீவிரவாத பயிற்சி முகாமை லஷ்கர் அமைப்பு நடத்தி வருகிறது. மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைமையகமும் இதுதான்.




மத போதனைகளுடன் மூளைச் சலவை செய்வது, ஆயுதப் பயிற்சி தருவது என்று சகல விதமான தீவிரவாத பயிற்சிகளையும் இங்குள்ள முகாமில் லஷ்கர் இ தொய்பா கொடுத்து வருகிறது. அந்த அமைப்பின் மிகப் பெரிய தீவிரவாத முகாமில் இது முக்கியமானது. இந்த முகாமிலிருந்து வருடந்தோறும் 1000 தீவிரவாதிகளாவது உருவாகிறார்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறது. 


இவர்களை பாகிஸ்தான் ராணுவத்தின் துணையோடு எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுறு வைத்து நீண்ட காலமாக நாச வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.


ஹபீஸ் சயீத்தான் இந்த அமைப்பின் தலைவன் ஆவான். இந்த அமைப்பின் துணை அமைப்புதான் (ஜமாத் உத் தவா) பஹல்காம் தாக்குதலை நடத்தியுள்ளது. 26 பேரின் உயிரை வாங்கிய இந்தத் தாக்குதலுக்குத்தான் இப்போது இந்தியப் படைகள் சரியான பதிலடியைக் கொடுத்துள்ளன.


லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா ஆகிய இரு அமைப்புகளின் தலைமையக கட்டடமானது கிட்டத்தட்ட 200 ஏக்கர் பரப்பளவில் இங்கு அமைந்துள்ளன. அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தீவிரவாத தலைமையமாக இது செயல்பட்டு வந்தது. லாகூர் நகரமானது இந்த இடத்திலிருந்து வெறும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைதுக்கு ஈபிஎஸ் கண்டனம்

news

Coolie Movie Review: ரஜினியின் "கூலி" படம் எப்படி இருக்கு.. தியேட்டர் அதிருதா.. இல்லை..?

news

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

news

79வது சுதந்திர தினம்.. தாய்த் திருநாட்டின் தியாகிகளுக்கு சல்யூட்.. பாரத அன்னைக்கு வணக்கம்!

news

சச்சின் டெண்டுல்கருக்கு மருமகள் வரப் போகிறார்.. தொழிலதிபர் மகளை மணக்கிறார் மகன் அர்ஜூன்!

news

செப்டம்பர் மாதம் வெளிநாடு செல்கிறேன்.. களப் பணிகளுக்குத் தயாராகுங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு

news

மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது: பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!

news

கத்திக் குத்து, அரிவாள், கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... இது தான் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்