சென்னை: தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்றும், நாளையும் தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ள நிலையில், இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாலும், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுதாலும் தமிழகத்தில் பரவலாக இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மிக கனமழை:

நீலகிரி, திருப்பூர், கோவை, மற்றும் தேனி ஆகிய நான்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று கனமழை:
தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர்,கடலூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவாரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மிக கனமழை:
தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்து 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் ஆழியாரில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் திருமூர்த்தி அணையில் 14 சென்டிமீட்டர் மழை பதிவானது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}