சென்னை: உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனை பட்டியலில், இந்த ஆண்டு இந்தியத் திரைப்படங்கள் நம்பிக்கையூட்டும் வகையில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான 'Tourist Family' (டூரிஸ்ட் ஃபேமிலி) திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலுக்குத் தகுதி பெற்றுள்ளது திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளுக்காக உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் விண்ணப்பிக்கப்படும். அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான முதற்கட்டப் பரிசீலனைப் பட்டியலை அகாடமி விருதுக் குழு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து ஐந்து முக்கியமான திரைப்படங்கள் "சிறந்த திரைப்படப் பிரிவில்" (Best Picture category) தகுதி பெற்றுள்ளன.
தேர்வான திரைப்படங்களின் பட்டியல்:

இந்த ஆண்டு ஆஸ்கார் பரிசீலனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தியத் திரைப்படங்கள் பின்வருமாறு:
Tourist Family: அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், ஒரு குடும்பத்தின் உணர்ச்சிகரமான பயணத்தைப் பேசுகிறது. டைரக்டர் சசிக்குமார், சிம்ரான் உள்ளிட்டோர் நடித்து பலரிடமும் வரவேற்பை பெற்ற படம்.
Kantara: Chapter 1: ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான இப்படத்தின் முந்தைய பாகம் உலகளவில் கவனம் ஈர்த்த நிலையில், இந்தப் பாகமும் ஆஸ்கார் ரேஸில் இணைந்துள்ளது.
Mahavatar Narsimha: புராணப் பின்னணியில் உருவான இத்திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கதைக்கள ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Tanvi the Great: பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஒரு மாறுபட்ட கதைக் கருவைக் கொண்டுள்ளது.
Sister Midnight: சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ஏற்கனவே பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அடுத்தகட்டமாக, இந்தப் பட்டியலில் இருந்து இறுதிப் பரிந்துரைப் பட்டியல் (Nominations) அறிவிக்கப்படும். அதில் இந்தியத் திரைப்படங்கள் இடம்பெற்று, ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}