OTT releases.. இந்த வாரம் 3 சூப்பர் படம் வருது.. ரெடியாகுங்க!

Oct 04, 2023,11:14 AM IST

- சங்கமித்திரை


சென்னை: பொங்கல்னா பச்சரிசி.. பொழுது போகாட்டி ஓடிடி.. இப்படிதாங்க ஆயிப் போயிருச்சு உலக நியதி. எது இல்லாமல் போனாலும் சமாளிச்சுக்கலாம்.. ஆனால் ஓடிடி இல்லாவிட்டால் பெரும்பாலானவர்களுக்கும் பொழுதே போகாது. 


ஓடிடி நமது வாழ்க்கையில் அந்த அளவுக்கு முக்கியமானதாகி விட்டது. கொரோனா காலத்தில்தான் இந்த ஓடிடி மிகப் பிரபலமானது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு ஓடிடிதான் மிகப் பெரிய பொழுது போக்காக அமைந்தது. டிவி சீரியல்களும் இல்லாமல் போனதால் மக்களுக்கு மிகப் பெரிய ரிலாக்ஸ் கொடுத்தது ஓடிடி படங்கள்தான்.


அந்த சமயத்தில்தான் ஓடிடியில் இத்தனை மேட்டர் இருக்கிறதா என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அப்போது விரல் விட்டு எண்ணும் அளவிலான ஓடிடிகளே இருந்தன. ஆனால் இன்று எக்கச்சக்கமாக குவிந்து கிடக்கின்றன. 


சரி அதை விடுங்க.. இந்த வாரம் ஓடிடியில் 3 அட்டகாசமான படங்கள் ரிலீஸாகின்றன. அதைப் பற்றிப் பாரக்கலாம் வாங்க.


மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி




அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி.. அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு படமாக உள்ளது. நெட்பிளிக்ஸில் அக்டோபர் 6ம் தேதி ரிலீஸாகிறது. அனுஷ்கா ஒரு பெண்ணியவாதியாக இந்தப் படத்தில் வருகிறார். வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபட்டி தயாரித்துள்ள இந்தப் படம் நவீன் பாலிஷெட்டி நாயகனாக நடித்துள்ளார்.  இதே பெயரிலேயே இப்படத்திலும் அவர் வருகிறார்.


ஜெயசுதா, முரளி சர்மா, நாசர், துளசி உள்ளிட்ட தெரிந்த முகங்களும் உள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படம் கலகலப்பானதாக அமைந்துள்ளது. பார்க்கத் தவறாதீர்கள்.


மிஸ்டர் பிரக்னன்ட்




இதேபோல இன்னொரு தெலுங்குப் படம் ஆஹா சானலில் வருகிறது. அதன் பெயர் மிஸ்டர் பிரக்னன்ட். ஸ்ரீனிவாஸ் விஞ்ஜனம்பாட்டி. சையத் சோஹல் ரியான், ரூபா கொடுவாயூர் நடித்துள்ளனர். சுஹாசினி மணிரத்தினம், பிரம்மாஜி, அலி உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.


முதலில் இந்தப் படத்தில் நடிக்க நானி, விஸ்வாக் சென் ஆகியோரைத்தான் அணுகியுள்ளனர். ஆனால் அது நடக்காமல் போய் விட்டது. இயக்குநர் ஸ்ரீனிவாஸின் மனைவி கர்ப்பமாக இருந்தபோது சந்தித்த அனுபவங்களைத்தான் இந்தப் படத்தின் கதையாக்கியுள்ளார்.


பார்ட்னர்




ஆதி, யோகிபாபு, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் பார்ட்னர்.  முழு நீள சிரிப்புப் படம் என்பார்களே.. அந்த வகை படம் இது. 


கோலி சூர்ய பிரகாஷ் தயாரிக்க, மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ள பமட் இது. சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். சிம்ப்ளி செளத் சானலில் இந்தப் படம் ரிலீஸாகிறது.


இந்தப் படங்கள் தவிர  நெட்பிளிக்ஸில் அக்டோபர் மாதத்திதல் ஏகப்பட் படங்கள் வெளியாகவுள்ளன. வரிசையாக வர வர பார்த்து ரசிங்க ஓகேவா!

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்