விடிய விடிய பெய்த மழை.. ஊரே ஊட்டி மாதிரி ஆயிருச்சு.. குளிரில் நடுங்கும் சென்னை.. மழை நீடிக்குமாம்

Aug 05, 2024,06:52 PM IST

சென்னை: சென்னையில் இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மழை விட்டுவிட்டு பெய்து வந்த சூழ்நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாட்களிலும் டமால் டுமீல் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவி வந்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்கள் அயற்சியடைதனர்.

மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய  கூடும்  என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 


இந்த நிலையில் தான் சென்னையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருகம்பாக்கம், கிண்டி, சோழிங்கநல்லூர், பட்டினம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து தற்போது வரை மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள்.


விட்டு விட்டு பெய்த தொடர் மழையால் அடையாறின் பிரதான சாலையில் மரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது சில்லென்ற வானிலை நிலவி வருகிறது. கிட்டத்தட்ட ஊட்டி போல குளிர்கிறது. பேனே போட முடியவில்லை. 


இன்றும் கனமழை: 


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தஞ்சை, திருவாரூர், நகை, மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில்  அடுத்த மூன்று மணி நேரத்தில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழையும், அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்து வரும் சூழ்நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என  எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


தமிழ்நாடு வெதர்மேன் தகவல்:


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 10 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யும். பின்னர் மழையின் தாக்கம் படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


சோழிங்கநல்லூரில் 12 சென்டிமீட்டர், கேளம்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர், அடையாறில் 10 சென்டிமீட்டர், எண்ணூரில் 9.2 சென்டிமீட்டர், கத்திவாக்கம் 8.7 சென்டிமீட்டர், கிண்டி 8.6 சென்டிமீட்டர், செம்பரம்பாக்கம் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல் ஸ்ரீபெரும்புத்தூரில் 7.4 சென்டிமீட்டர், காஞ்சிபுரத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்