கண்டதும் காதலா

Apr 15, 2026,10:41 AM IST

- பாவலர் மாயோன் மங்கை



மாலை இளம் வெயிலிலே

மலையோரம்  நான் நடக்க


மஞ்சள்  குருவி ஒன்னு மலையாளப் பாட்டிசைக்க


வச்ச அடி  பின்   இழுக்க

மிச்ச அடி  நான் மறந்தேன்


மலையாளம் மனம்தூவ


சிலையாக

நின்றவளை


கலையாகத்தான்

பார்த்தேனே

காதலை வளர்த்தேன்


மல்லையில் சிற்பம்

மயிலிறகுக் கூந்தல்

அலைய





சேரனின் தந்தம் போல

சேயிழையால்

மினுமினுக்க


சோழனின் கோபுரமே

சொட்டுகின்ற  இளமையது

பாடிவந்த பைங்கிளி தான்

பஞ்சவர்ணக்  கிளி

மொழியோ


பிரம்மனின் படைப்பிலே

பித்தாகி  நான் நிற்க


வானத்து தேவதையை

வாஞ்சையுடன்   அணைத்தானே


அணைத்தவன் மார்போடு ஆரணங்கு ஆரணங்கு

துவண்டுவிழ


ஆலம் விழுதொன்று

வேரோடு  விழுந்தது போல்


அன்றே  விழுந்தவன்

நான் இன்றுவரை

எழவில்லை

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்