டெல்லி: பாகிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது நாளாக ட்ரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதனை முறியடித்து இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக நேற்று நள்ளிரவில் விடிய விடிய 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானிலேயே இடைமறித்து அழித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் போர்பதற்ற சூழல் நிலவிவரும் நிலையில், பாகிஸ்தான் ட்ரோன்களை பயன்படுத்தி வான் தாக்குதல் நடத்த முயற்சித்து வருவதால், வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக ஜம்மு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
நேற்று இரவு பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள 26 நகரங்கள் மீது ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இதனை நடு வானிலேயே இடைமறித்து பாதுகாப்பு படையினர் அளித்துள்ளனர். அதே போல் பதான்கோட் விமான படைத்தளத்தை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட மேம்பாட்டு குழு கூடுதல் ஆணையர் ராஜ்குமார் தம்பா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயத்தில் பதான்கோட், பூஜ்ச், ரஜோரி பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் தொடர்ந்து குண்டுவெடிப்புகளால் ஜம்மு காஷ்மீர்,பூஜ்ச் ரஜோரியில் வீடுகள் சேதமடைந்தன. வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும், இந்த தாக்குதலில் காயமடைந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே சமயத்தில் டெல்லியில் மருத்துவமனைகள் யார் நிலையில் உள்ளதாகவும், படுக்கை வசதிகள் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பு உள்ளதாகவும் முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!
ராணுவத்திற்கு உதவ தயார்... சண்டிகரில் குவிந்த வரும் இளைஞர்கள்!
அறத்தின் அடிப்படையில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்துகிறது: அண்ணாமலை!
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? பிசிசிஐ சொல்வது என்ன?
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வு... அழகர் கோவிலில் இருந்து.. இன்று கள்ளழகர் புறப்பாடு..!
{{comments.comment}}