இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தற்போது சிறைவாசம் அனுபவித்து வருபவருமான இம்ரான் கான், புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் (chancellor) பதவிக்கு போட்டியிடுகிறார்.
பாகிஸ்தான் பிரதமராக 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இம்ரான் கான். ஆட்சி மாறி, காட்சியும் மாறி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளனர். பலமுறை கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு இம்ரான் கான் விண்ணப்பித்துள்ளாராம். விண்ணப்பத்தை தயாரிக்குமாறு தனது வக்கீல்களுக்கு அவர் அறிவுறுத்தியிரு்நதார் என்று இங்கிலாந்தில் உள்ள அவரது கட்சி செய்தித் தொடர்பாளர் ஜுல்பிகர் புகாரி கூறியுள்ளார். இந்த பதவியானது சம்பளத்துடன் கூடியது கிடையாது. வெறும் கெளரவப் பதவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான கிறிஸ் பேட்டன் கடந்த பிப்ரவரி மாதம் தனது சான்சலர் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவிக்குத்தான் ஆள் எடுக்கவுள்ளனர். அதற்குத்தான் இம்ரான் கான் விண்ணப்பித்துள்ளார். ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் கவர்னராக இருந்தவர் கிறிஸ் பேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதவியானது 10 வருட கால ஆயுள் கொண்டது. இந்தப் பதவிக்கு போட்டியிடுவோர் யார் என்ற பட்டியல் அக்டோபர் மாதத்திற்கு மேல்தான் வெளியாகும். அதன் பின்னர் அக்டோபர் கடைசியில் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் சான்சலாரக அறிவிக்கப்படுவார். இம்ரான் கான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 1975ம் ஆண்டு அரசியல், பொருளாதாரம், தத்துவியல் பட்டப் படிப்பு படித்து பட்டம் வென்றவர் என்பது நினைவிருக்கலாம்.
ஒரு காலத்தில் ரோமியோ வாழ்க்கை வாழ்ந்தவர் இம்ரான் கான். குறிப்பாக கிரிக்கெட் வீரராக வலம் வந்தபோது பலருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். 3 முறை திருமணம் செய்தவரும் கூட. அதில் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெமிமா கோல்ட்ஸ்மித். பின்னர் அரசியலுக்குத் திரும்பினார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சான்சலராக இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்தப் பதவிக்கு வரும் முதல் ஆசியர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}