டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

Jan 29, 2026,02:50 PM IST

கராச்சி: டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை ஏதும் விதித்தால் அதை சமாளிக்கும் திட்டங்களையும் அது வகுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.


டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளன. இந்தத் தொடரில் வங்கதேசம் நீக்கப்பட்டுள்ளது. காரணம், ஐபிஎல் போட்டியிலிருந்து ஒரு வங்கதேச வீரரை நீக்கியதைக் கண்டித்து, இந்தியால் தாங்கள் கலந்து கொள்ளவுள்ள போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வங்கதேசம் கோரியிருந்தது. அதை ஐசிசி ஏற்கவில்லை. வங்கதேசமும் தனது முடிவிலிருந்து விலகவில்லை. இதனால் வங்கதேசம் நீக்கப்பட்டது.




இந்த நிலையில், வங்கதேச அணிக்கு ஆதரவாக, இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் (பிப்ரவரி 15) விளையாடாமல் இருக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.


இதன் காரணமாக, ஐசிசி விதிக்கும் அபராதம் அல்லது தடைகளில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்தப் புறக்கணிப்பை கிரிக்கெட் வாரியத்தின் முடிவு என்று சொல்லாமல், அரசின் உத்தரவு என்று காட்டினால் ஐசிசி நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் என பாகிஸ்தான் நம்புகிறது.


பாகிஸ்தான் - இந்தியா இடையிலான போட்டிகளுக்கு எப்போதுமே கிராக்கி அதிகம் இருக்கும். எனவே இந்தப்  போட்டியைப் புறக்கணித்தால், ஒளிபரப்பு நிறுவனங்கள் மூலம் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது.  இதை மனதில் வைத்தே பாகிஸ்தான் இந்த குறுக்குப் புத்தியுடன் செயல்படுதாக தெரிகிறது. ஒரு வேளை பாகிஸ்தான், இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா போட்டியை புறக்கணிப்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புடன் பிசிபி தலைவர் மோசின் நக்வி ஆலோசித்துள்ளார். இறுதி முடிவு வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்பினை (சிறுகதை)

news

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.. அந்த 16 என்னன்னு தெரியுமா?

news

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி

news

நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

தைப்பூசம்: முருகப்பெருமானை போற்றிக் கொண்டாடும் திருநாள்!

news

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: ஆனந்த் அறிவிப்பு

news

கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி

அதிகம் பார்க்கும் செய்திகள்