சென்னை: சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை செயல்படுகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பயண போக்குவரத்து செலவின தொகையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்றுள்ளது. எனவே, போட்டியை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எந்தவித கட்டணமும் இல்லாமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம். 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
போட்டிக்கான டிக்கெட்டில் உள்ள பார்கோடு வைத்து தான் மெட்ரோ ரயிலில் ரசிகர்கள் பயணிக்க முடியும் என்பதால் டிக்கெட்டை கிரிக்கெட் ரசிகர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு செய்துள்ளது பிளஸ் இலவச பயணம் ஆகிய சலுகை, கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}