பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில்.. முத்திரை பதிக்கும் தமிழ்நாட்டு  வீராங்கனைகள்.. தொடர் பதக்க வேட்டை!

Sep 03, 2024,11:16 AM IST

பாரிஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கான பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கமும், மனிஷா வெண்கல பதக்கமும் வென்றுள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனால் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இது 17 வது போட்டியாகும். கடந்த ஆகஸ்ட் 28ஆம்  தேதி மிகப்பிரமாண்டமாக தொடங்கப்பட்ட இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் செப்டம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. 167 உலக நாடுகளில் இருந்து மொத்தம் 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்க மகன் மாரியப்பன், துளசி மதி,  சிவராஜன் சோலைமலை, மனிஷா ராமதாஸ், நித்திய  ஸ்ரீ, கஸ்தூரி ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.



இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் சீனா வீராங்கனையிடம் போட்டியிட்டு 17-21, 10-21 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனுஷா ராமதாஸும் டென்மார்க் வீராங்கனையிடம் போட்டியிட்டு 21-12, 21-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். 

இந்த நிலையில் மகளிர்  பேட்மிண்டன் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நித்திய ஸ்ரீ சிவன் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் இந்தோனேஷியா வீராங்கனை ரினா மர்லீனாவை 21 க்கு 16, 21 க்கு 16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றார்.

இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 15 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 15வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்

news

இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்