பாரிஸ்: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஜுடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் கபில் பர்மர்.
பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கப்பட்டு செப்டம்பர் 8 வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியர்கள் 84 பேர் உட்பட மொத்தம் 4400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் தரம்பிர் தங்கப் பதக்கத்தையும், பிரணவ் சர்மா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம், ஒன்பது வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் கிடைத்தது. 2024 பாரா ஒலிம்பிக் போட்டிகள் இந்தியா 24 பதக்கங்களை வென்று 13 வது இடத்திற்கு முன்னேறியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜூடோ போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் வீரர் எலிட்டன் ஒலிவிராவை வீழ்த்தி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கபில் பர்மர் வெண்கல பதக்கத்தை வென்றார். இவர் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கபில் பர்மர் ஜூடோவில் வெண்கல பதக்கத்தை வென்ற நிலையில் மேலும் ஒரு பதக்கம் என இந்தியாவுக்கு 25 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}