ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அவர் பிறந்த ராமநாதபுரம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. அவரது பிறந்த தினமும், நினைவு தினமும் ஒரே நாளில் வருகிறது. முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குருபூஜை விழா என 3 நாட்கள் இவ்விழா இந்தாண்டு நடைபெற்றது.
கடந்த 28ம்தேதி ஆன்மிக விழாவாகவும், 29ம் தேதி அரசியல் விழாவாகவும், 30ம் தேதியான இன்று அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வந்தார். அரசு விருந்தினர் மளிகையில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 7.40 மணியளவில் கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, கீதாஜீவன, திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள்,மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் மதுரையில் உயர்மட்ட 2 மேம்பால பணிகளை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு சென்று அரசு சார்பில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு மரியாதை செலுத்துகின்றனர்.
பலத்த பாதுகாப்பு

தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவிற்கு பல்வேறு முக்கிய தலைவர்கள் படையெடுத்து வர உள்ளதால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கமுதி முதல் பசும்பொன் வரை சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்கவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் பசும்பொன்னில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சென்னையிலும் கோலாகலம்
இதேபோல சென்னையிலும் தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு பல்வேறு தலைவர்களும், பிரமுகர்களும், பொதுமக்களும் மாலை அணிவித்தும், பால் குடம் எடுத்து வந்தும் அஞ்சலி செலுத்தினர்.
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}