- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
ஆவிக்குள் கலந்தவளே!
அனுதினமும் உன் நினைவே!
பூமிக்குப் பாரமாக இருந்தவனைப்
பூகோளம் புகழும்படிச் செய்தவளே!
உன் அன்பில் உயிர் வாழ்வது
மனதுக்கு மகிழ்ச்சியடி!
காவேரி ஊற்றெனவே
ஆயிரம் ஆயிரம் கற்பனைகள்!
முகம் மலரோ தாமரைப்பூ!
மனம் மணமோ மல்லிகைப்பூ!
கருங்கூந்தல் காட்சி எல்லாம்
கார்மேக வானம் தான்!

திருமகளே உனைப் பற்றித்
திருப்புகழ் நான் பாடுகின்றேன்!
திரும்புகின்ற திசை எல்லாம்
அரும்புகிறது என் ஆசை மனம்!
ஊர்வலமும் போய் வரலாம்!
ஊர் உலகம் பாராட்டத்
தேர் ஏறி வலம் வரலாம்!
சீர் பெருமை பெற்றிடலாம்!
மாஞ்சோலை பூஞ்சோலை தான்
நமது பிருந்தாவனம்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).
முகம் மலரோ தாமரைப்பூ.. மனம் மணமோ மல்லிகைப்பூ!
வேறு முகங்கள்!
நூலகமும் நானும்.. மயிலாப்பூர் முதல் பாஸ்டன் வரை!
அமைதியா இரு
Short Story by Sudha Thirunarayanan: பை!
தலையங்கம்: நாட்டின் பாதுகாப்பில் பெண்மையின் பேராற்றல்.. CRPF Women Battalion turns 40!
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
{{comments.comment}}