மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரை சந்திக்க தவெக தலைவர் விஜய் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தரப்பில் மனு தாக்கல்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விஜய் கடந்த 27ம் தேதி தனது 3வது கட்ட சுற்றுப்பயணத்தை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது கரூர் மாவட்டத்தில் அதிகளவில் கூட்டம் கூடியது.விஜய் பேச ஆரம்பிக்கும் போதே மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடியிருந்த கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால், அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழ ஆரம்பித்தனர். இதனை கண்ட விஜய் என்ன என்று கேட்க,தண்ணீர் என்று தொண்டர்கள் கையசைக்க, உடனே விஜய்யின் பிரச்சார வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து எரிந்தார். உடனே அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. உ டனே விஜய் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கிளம்பினார்.

அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் 5 பேர், பெண்கள் 17 பேர் மற்றும் ஆண்கள் 12 பேர் உயிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் விஜய் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல உத்தரவிட்டார்.
இதனையடுத்து, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு ஆணையம் அமைத்தார். நெரிசலில் சிக்கி, இதுவரை 41 பேர் உயிரிழந்து உள்ளனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க விஜய் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் கரூர் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}