டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள பசு ஒன்று கன்று ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக் குட்டிக்கு தீப்ஜோதி என்று பெயரிட்டுள்ள பிரதமர் மோடி அதைத் தூக்கி கொஞ்சி பாசம் காட்டிய புகைப்படங்களையும், வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம், டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ளது. இங்கு பசுக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தற்போது கன்று ஈன்றுள்ளது. அந்தக் கன்றுக் குட்டிக்கு பிரதமர் மோடி, தீப் ஜோதி என்று பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் கன்றுக் குட்டி வீட்டுக்குள் நடந்து வருவது, பிரதமர் இருக்கையில் சொகுசாக அவருக்கு அருகில் அமர்ந்திருப்பது, அவரது மடியில் படுத்திருப்பது என்று க்யூட்டாக இருக்கிறது தீப் ஜோதி கன்றுக் குட்டி.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் இல்லத்துக்கு அருமையான புது வரவாக தீப்ஜோதி வந்துள்ளார். அந்தக் கன்றுக் குட்டியின் நெற்றியில் ஜோதி போன்ற வடிவம் உள்ளது. இதனால் கன்றுக் குட்டிக்கு தீப் ஜோதி என்று பெயரிட்டுள்ளேன். புதிய கன்றுக் குட்டியின் வரவு மங்களகரமானதாக உள்ளது என்று கூறி மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}