கொழும்பு: மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அந்நாட்டு அதிபர் அநுரகுமாராவை சந்திக்கிறார். முன்னதாக கொழும்பு விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரின் அன்பு அரவணைப்பில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர்
தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்திற்கு வருகை தந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அந்நாட்டு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அநுரகுமாரா பிரதமரை வரவேற்று கௌரவித்தார். அணி வகுப்பு மரியாதையும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
அதன்படி இலங்கைக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்திய நிதி உதவியுடன் திரிகோணமலை சம்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை இலங்கை அதிபர் அநுரகுமாராவை சந்தித்து பேச இருக்கிறார்.
இந்த சந்திப்பில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில் எரிசக்தி, வர்த்தகம், பாதுகாப்பு துறையின் இருநாட்டு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

இதில் திரிகோண மலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது, கடன் சீரமைப்பு, பாதுகாப்புத் துறையில் பயிற்சி திட்டங்கள், உபகரணங்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கிழக்கு மாகாணத்தில் பயன்பாட்டு திட்டங்கள் குறித்து இந்தியா இலங்கை இடையேயான ஒப்பந்தங்களில் கையத்திட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் தமிழக மீனவர்கள் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துரைசிங்கம் Coming back?.. மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் சூர்யா.. ஆவேஷம் இயக்குநருக்காக!
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடவுள் இருக்கிறாரா இல்லையா?
களை கட்டியது உலக பாரம்பாரிய வாரம்.. நீங்க கீழடி போய்ட்டு வந்துட்டீங்களா.. கிளம்புங்க முதல்ல!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 20, 2025... இன்று பணம் கைக்கு வரும் நாள்
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}