PM Narendra Modi: உலகிலேயே பிரபலமான தலைவர் யார் தெரியுமா?.. கெத்து காட்டும் இந்தியா!

Mar 27, 2026,05:11 PM IST

- பாவை.பு


டெல்லி: உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உருவெடுத்துள்ளார்.


அமெரிக்காவின் ‘மார்னிங் கன்சல்ட்’ (Morning Consult) என்ற நிறுவனம், சமீபத்தில் உலகின் மிகவும் பிரபலமான தலைவர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியது. மார்ச் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,  பிரதமர் மோடி  68 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்றுத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


இந்நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்பிலும், பிரதமர் மோடி 75 சதவீத மக்களின் ஆதரவுடன் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடியின் ஆட்சி நிர்வாகம், திட்டங்கள், மக்களை ஈர்க்கும் திறன் மற்றும் சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடனான இணக்கமான உறவு போன்ற காரணங்களால், அவருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் செல்வாக்கையும் அங்கீகாரத்தையும் இந்த ஆய்வு காட்டுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.




இந்தக் கருத்துக் கணிப்பில் இரண்டாம் இடத்தை ஸ்விட்சர்லாந்து அதிபர் கை பார்மலின் (Guy Parmelin), அவரைத் தொடர்ந்து தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae-myung) பிடித்துள்ளனர்.


இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், உலகின் முதல் பத்து இடங்களுக்குள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடம்பெறவில்லை. அவர் 39 சதவீத ஆதரவுடன் 13-வது இடத்தில் உள்ளார். மேலும், பிரெஞ்சு அதிபர் மேக்ரான் 17 சதவீத வாக்குகளுடன் 23-வது இடத்தைப் பிடித்துப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்