திருநெல்வேலி அல்வா போல இனிமையானவர்கள் நீங்கள்.. நெல்லையை அதிர வைத்த பிரதமர் மோடி!

Feb 28, 2024,06:46 PM IST
திருநெல்வேலி: நெல்லை மக்கள், திருநெல்வேலி அல்வா போல இனிமையானவர்கள். உங்களுக்கு நான் பேசுவது புரியாமல் இருக்கலாம்.. ஆனால் என்னை புரிந்து வைத்துள்ளீர்கள். தமிழில் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு அதிகம் இருக்கிறது என்று திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில்  பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழர்கள், தமிழர்களின் பிள்ளைகளை முன்னேற்ற நான் இருக்கிறேன். தமிழில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு அதிகம் இருக்கிறது. நான் பேசுவது புரியவில்லை என்றாலும் எனது மனதை தமிழர்கள் புரிந்து கொண்டுள்ளனர். அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு எனது பணிவான வணக்கங்களையும் நமஸ்காரங்களையும் உரித்தாக்குகின்றேன்.



நாடு 100 அடிகளை நோக்கி  முன்னேறும்போது தமிழ்நாட்டையும் அதே அளவுக்கு முன்னேற்றுவது நம் கடமை. அது தான் மோடியின் வாக்குறுதி. இதற்குதான் மதுரையில் எய்ம்ஸ் தொடங்க உள்ளோம். நெல்லை மக்கள் திருநெல்வேலி அல்வா போன்ற இனிப்பானவர்கள், இனிமையானவர்கள். தமிழ்நாட்டில் குழந்தைகள், இளைஞர், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் பாஜக மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். 

தமிழ்நாட்டிற்காக நான் அளித்து அத்தனை உறுதி மொழிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் இது எனது உத்தரவாதம். தமிழ்நாட்டு மக்கள் எதிர்காலத்தைப் பற்றி தெளிவுடன் இருப்பார்கள். ஏனெனில், தொழில்நுட்ப அறிவில் தமிழர்கள் சிறந்து விளங்குகின்றனர். பாஜகவின் அணுகுமுறை தமிழ் மக்களின் சிந்தனையோடு ஒத்துப் போகிறது.

பாஜக தான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி. உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் தான் வருகிறது.

தமிழ்நாடு மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், விசுவாசமும் எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம்.மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது. மாற்று எரிசக்தி துறையில் உலகில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தராத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது.

திமுக தமிழ்நாட்டை சுரண்டவது போல, காங்கிரஸ் இந்தியா கூட்டணியை அமைத்து நாட்டை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுகவும், காங்கிரசும் சம்பாதிக்க நினைக்கிறது. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். லோக்சபா தேர்தலுக்குப் பிறகு  திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். 

குடும்ப அரசியல் தான் தலைதூக்கியுள்ளது. எந்த திட்டமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால், ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது. நெல்லை மக்களின் ஆசியோடு நான் மூன்றாவது முறையாக பதவியில் மீண்டும் அமர்வேன் என்றார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

அதிகம் பார்க்கும் செய்திகள்