டெல்லி: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை திருப்பி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது சட்டவிரோதமாக குடியேறும் அந்நிய நாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ஏழு லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரமாக செயல்பட்டு, ராணுவ விமானத்தின் மூலம் இந்தியர்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கடந்த புதன்கிழமை அமெரிக்க ராணுவ விமானம், 104 இந்தியர்களை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குருராம்தாஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் குற்றவாளிகளைப் போல் கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதே சமயத்தில் நாடாளுமன்றத்தில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றியது ஏன் என கடுமையான வாக்குவாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பாரீஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி பிறகு அமெரிக்காவுக்குச் சென்றார். தலைநகர் வாஷிங்டனில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க பயணத்தின் முக்கிய அம்சமாக அதிபர் டிரம்ப்பை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசியபோது, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி உள்ள இந்தியர்களை திரும்ப ஏற்றுக் கொள்ள தயார். எளிய குடும்பப் பின்னணி கொண்டவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் காட்டி தவறாக வழி நடத்தப்பட்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படுகின்றனர். நாடு விட்டு நாடு மனிதர்கள் கடத்தப்படும் இந்த கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}