திருச்சி ஏர்போர்ட்டின் பிரமாண்ட புதிய முனையம்.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Jan 01, 2024,06:48 PM IST

திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பிரமாண்ட அதி நவீன முனையத்தை அவர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.




ஜனவரி 2ம் தேதி திருச்சிக்கு வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் சிறப்பு நிகழ்த்துகிறார். இதில் ஆளுநர் ஆர். என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.


அதன் பின்னர் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். விமானத்துறை, ரயில்வே, நெடுஞ்சாலை, ஆயில் காஸ், கப்பல்துறை மற்றும் உயர் கல்வித்துறை தொடர்பான திட்டப் பணிகள் இவை.


இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  ரூ. 1100 கோடி மதிப்பீட்டில் மிகப் பிரமாண்டமாக, நவீனமாக இந்த முனையம் கட்டப்பட்டுள்ளது.  வருடம் தோறும் 44 லட்சம் பயணிகளைக் கையாளும் அளவுக்கு இந்த விமான நிலையத்தில் வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கூட்ட நெரிசலான நேரங்களில் ஒரே சமயத்தில் 35000 பணிகளை கையாள முடியும்.


பிரதமர் மோடி நாளைய தினம் தொடங்கி வைக்கவுள்ள பிற திட்டங்கள்:




மதுரை - தூத்துக்குடி இடையிலான 160 கிலோமீட்டர் ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணி.


திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்தரகோசமங்கை, தேவிப்பட்டனம், ஏர்வாடி, மதுரை உள்ளிட்ட ஊர்களை இணைக்கும் வகையிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள்.


முகையூர் - மரக்காணம் இடைியலான நான்கு வழிப் பாதைப் பணிகள். 


காமராஜர் துறைமுகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொது சரக்கு பிரிவு முனையத் தொடக்கம்.


ரூ. 9000 கோடி மதிப்பீட்டிலான இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா.


திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்  கட்டப்பட்டுள்ள 500 படுக்கை வசதிகள் கொண்ட மாணவர் விடுதி தொடக்க விழா ஆகியவற்றையும் தொடங்கி வைப்பார் பிரதமர் மோடி.


பலத்த பாதுகாப்பு




பிரதமர் மோடி வருகையைத் தொடர்ந்து திருச்சியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திருச்சி பஸ் நிலையம், ரயில் நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு, விமான நிலையம் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில், விராலிமலை வழியாக போகுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்