எல்லோரையும் போலீஸாரால் பாதுகாக்க முடியாது.. ஹரியானா முதல்வர் ஷாக் பேச்சு!

Aug 03, 2023,12:58 PM IST
சண்டிகர்:  போலீஸாரால் மாநிலத்தில் உள்ள எல்லோரையும் பாதுகாக்க முடியாது. அனைவரும் அமைதியாக இருந்து மத நல்லிணக்கத்தை பேணிக்காக்க உதவ வேண்டும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

ஹரியானாவில் கலவரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. குருகிராம், பரீதாபாத் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கலவரம் இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளது. தலைநகர் டெல்லிக்கு அருகே கலவரம் வெடித்து இருப்பதால் டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் மாநிலத்தில் உள்ள எல்லோரையும் பாதுகாக்க முடியாது என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒற்றுமை இல்லாவிட்டால் பாதுகாப்பும் இருக்காது. அனைவரும் ஒருவரை ஒருவர் எதிர்க்க ஆரம்பித்தால் பாதுகாப்பு இருக்காது. நானோ இல்லை, போலீஸாரோ அல்லது ராணுவமோ, யாராலுமே ஒவ்வொருவரையும் பாதுகாக்க முடியாது.



பாதுகாப்பை உறுதி செய்யும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். நல்லுறவு நிலவ வேண்டும்.  அதற்காகத்தான் நாங்கள் அமைதிக் குழுக்களை அமைத்துள்ளோம். போலீஸார் தொடர்ந்து விழிப்புடன் இருந்து வருகிறார்கள்.  உலகம் பூராவும் போய்ப் பாருங்கள், போலீஸாரால் எல்லோரையும் பாதுகாக்க முடியாது. 50,000 போலீஸார்தான் இருக்கிறார்கள்.. ஆனால் 2 லட்சம் மக்களைப் பாதுகாக்க வேண்டும், எப்படி முடியும் என்றார் கட்டார்.

இந்தக் கலவரத்துக்கெல்லாம் மூளையாக இருப்பவர் மோனு மானிசர் என்பவர்தான், அவர் குறித்த தகவல் கிடைத்ததா என்று செய்தியாளர்கள் கட்டாரிடம் கேட்டதற்கு, அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை.  உண்மையில் அவர் மீது உள்ள வழக்கு ஹரியானாவில் போடப்பட்டது கிடையாது. மாறாக ராஜஸ்தான் அரசுதான் அவர் மீது வழக்குப் போட்டது. அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு ராஜஸ்தான் அரசு கேட்டுக் கொண்டால் நாங்கள் உதவுவோம். இப்போது அவர்கள்தான் அவரைத் தேடிக் கொண்டுள்ளனர். எங்களிடம் மோனு மானிசார் குறித்த தகவல் இல்லை. அவர்களிடம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து நாங்கள் எப்படிச் சொல்ல முடியும் என்றார் கட்டார்.


இந்த மோனு மானிசார் என்பவர் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 2 கொலைகள் செய்த குற்ற வழக்கில் தேடப்பட்டு வருகிறார். கடந்த பிப்ரவரி முதல் இவர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவர் ஹரியானாவில்தான் பாதுகாப்பாக பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் மக்களைத் தூண்டி விடும் வகையிலான வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு நு கலவரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் நு நகரில் நடந்த விஎச்பி பேரணியிலும் கூட இவர் கலந்து கொண்டதாகவும், தாக்குதலை ஆரம்பித்து விட்டு போய் விட்டதாகவும் கூட தகவல்கள் உள்ளன. நு நகரில் தொடங்கிய கலவரத்தில் ஒரு மசூதி தீவைத்து எரிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன என்பது நினைவிருக்கலாம். அங்கிருந்துத��ன் ஹரியானாவின் பல மாவட்டங்களுக்குக் கலவரம் பரவியது. தற்போது டெல்லிக்கு அருகே வரை கலவரம் வந்து விட்டது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்