அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு.. ஏன்?

Sep 05, 2023,10:46 AM IST
சென்னை: சென்னை க்ரீன்வேஸ் சாலை மற்றும் நீலாங்கரையில் உள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்துப் பேசியதை சர்ச்சையாக்கி வருகிறார்கள். பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்டோர் இந்தப் பேச்சைக் கண்டித்துப் பேசி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி கொடுப்பதாக கூறியுள்ளார். 



கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தானின் துங்ர்பூரில் பாஜகவின் பரிவர்த்தன் யாத்திரை தொடக்க விழா நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா  பேசும்போது, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சனாதன தர்மத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டினர்.  இதற்கு எதிராக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலாங்கரையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எப்போதும் ஒரு காவலர் என்ற சுழற்சி முறையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்