தூத்துக்குடி: இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர். விழா எங்கு நடந்தது தெரியுமா.. சமீபத்தில் வெள்ளத்தில் சிக்கி மீண்டுள்ள தூத்துக்குடியில்தான்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அதுவும் ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும் பெண்கள் சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்திய கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியா வருவது இயல்பு. இவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து வருவார்கள். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள், கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பழகி வருவார்கள் மேலும் அவர்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொள்வார்கள். இதன் மூலம் இந்திய பண்பாடு கலாச்சாரங்களை அறிந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 47 பேர் சென்னை வந்தனர். அங்கிருந்து கடந்த 28ஆம் தேதி 20 ஆட்டோவில் பயணத்தை தொடங்கிய இவர்கள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். விதவிதமான வண்ணங்களில் ஆட்டோக்களை அலங்கரித்து இருந்தனர்.
அவர்கள் கலாச்சார ஆடைகள் அணிந்து தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயம், மணப்பாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர். இறுதியாக தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்திற்கு சென்று, அங்குள்ள ஒரு தோட்டத்தில் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர். அப்பொழுது 20 மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதற்காக, வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தினர். ஆண்கள் வேஷ்டி துண்டும், பெண்கள் சேலைகளையும் அணிந்திருந்தனர். அந்தப் பகுதியில் கரும்பு வாழையால் தோரணங்கள் அமைத்து, மஞ்சள் குழை, பழம், பனங்கிழங்கு படைத்து பொங்கல் இட்டு வழிபாடு செய்தனர்.
இது குறித்து வெளிநாடு சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மக்கள் உற்சாகமாக எங்களை வரவேற்றனர். மண் பானையில் பொங்கல் இடுவது வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறினார். இந்த சுற்றுலா குழுவினர் இன்று நெல்லை செல்கின்றனர். அங்கிருந்து 6ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}