விஷச் சாராய மரணங்களுக்கு.. நிவாரணம் கொடுப்பது தவறான முன்னுதாரணம்.. பிரேமலதா விஜயகாந்த்

Jun 20, 2024,07:16 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து உயிர்  இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கிறார்கள் என்றால், கள்ளச்சாராயம் குடிப்பவர்களை ஊக்கப்படுத்துகிறதா இந்த அரசு என்ற கேள்வி எழுகிறது. அப்போ நாமும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் அரசு ரூ.10 லட்சம் தரும் என்ற தவறான எண்ணம் மக்கள் மனதில் வந்திவிடும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரேமலதா விஜயகாந்த். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,  போதை இல்லாத தமிழகம் தான் என் லட்சியம் என்று சொன்னாரு முதல்வர். இதுக்கு என்ன தீர்வு செய்தார்.  ஏற்கனவே இது மாதிரி கள்ளச்சாராயம் சாப்பிட்டு பல பேர் உயிரிழந்திருந்த சம்பவம் நடந்தது. அப்பயும் நம்ம எல்லாரும் வந்தோம். இதே நிகழ்வு தான் நடந்தது. 


அப்ப என்ன சொன்னாரு முதல்வர் உடனடியாக கள்ளச்சாராயம் தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவிற்கு கட்டாயம் இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று சொன்னார்.  இந்த நிமிஷம் வரைக்கும் 38 பேர் உயிர் போயிருக்கு. பத்து பதினைந்து பேர் உயிர்  ஊசல் ஆடிட்டு இருக்கிறது. இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. மக்கள் கேள்வியாக நான் கேட்கிறேன்.




டாஸ்மார்க் இல்லா தமிழகத்தை உருவாக்கணும். நாங்களும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எல்லாமே இங்கே கண் துடைப்பு நாடகமா தான் இருக்கு. எதுக்கெடுத்தாலும் வரும் முதல்வர் ஏன் இப்ப வரைக்கும் வரல. 38 உயிர் போயிருக்கு. எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கு. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஏன் வரல. மக்கள் கேள்வியை நான் எழுப்புகிறேன். இன்னைக்கு வெறும் தேர்தலை மையமாகக் கொண்டு  ஆட்சி நடத்துகிறார்கள்.


தேர்தலினால் அரசியல் மட்டும் தான் நடக்குது ஒழிய மக்களுக்கு பயனளிக்கக்கூடிய எந்தவித திட்டங்களும், முன்னேற்றங்களும் தமிழ்நாட்டில் நடந்ததாக இல்லை. மக்களாகிய நீங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே ஒரு கோடி பேருக்கு வேலை இல்லை. கொடுத்த வாக்குறுதியில் எந்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றவில்லை.


ஓட்டுக்கு காசு கொடுத்து ஊழல் பண்றது, மக்களை ஏமாற்றுவது, பொய் வாக்குறுதிகளை கொடுப்பது எல்லாம் அடுத்த தேர்தலை நோக்கி தான் இந்த கட்சிகள் போகிறது என்று  மன வருத்தத்தோடு கூறுகிறேன்.அதிகாரிகளை மாற்றிவிட்டால் போன உயிர் வந்துவிடுமா? ஒரு குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் அறிவிக்கிறாரு அப்ப கள்ளச்சாராயத்திற்கு இந்த அரசு ஊக்கப்படுத்துகிறதா? ஒரு கள்ளச்சராயத்தை தடுக்க வேண்டிய முதல்வர் கள்ளச்சாராயத்திற்காக குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் நிவாரணம் தருவது தப்பு. நம்மளும் கள்ளச்சாராயம் குடித்து செத்தா நம்ம குடும்பத்துக்கு 10 லட்சம் வரும் என்று அனைரும் தப்பா புரிந்து கொள்வார்கள். இது தப்பான முன் உதாரணம்.


அதற்கு பதில் அரசு உடனடியாக டாஸ்மார்க் அளவை குறைக்கணும். லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கணும். கள்ளச்சாராய விற்பனையை ஒழிகக வேண்டும். இன்றைக்கு அதிகாரிகளை மாற்றுவதும், 10 லட்சம் கொடுப்பதும் வெறும் கண்துடைப்புதான். இங்கு எத்தனை பேர் உயிர் போய் இருக்கு, அதற்கு என்ன பதில். முன்னர்  ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தாங்க. இந்த நிகழ்வால் இன்னொரு 2000 சேர்த்து கொடுப்பாங்களே ஒழிய எதிர்கால தமிழ்நாட்டிற்கு எதுவும் கிடையாது. 


மிகவும் மன வருத்தத்தோடு  சொல்கிறேன். இன்னைக்கு  இவ்வளவு போலீஸ் போடப்பட்டு இருக்கு. இந்த போலீஸ்களை எல்லாம்  விட்டு கண்காணித்தாலே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியும். அரசும் காவல்துறையும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு  சப்போர்ட்டா இருக்கு.  இது கண்டிப்பா கண்டிக்கக் கூடிய  விஷயம் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: அனல் பறக்க முடிந்த சட்டசபைத் தேர்தல்.. வரலாறு காணாத வாக்குப் பதிவு!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்